85.9 F
Tirunelveli
Tuesday, May 24, 2022
முகப்பு மாவட்டம் திருச்சி காவல்துறையின் பயன்பாட்டிற்காக "முக அடையாளம் கண்டறியும் மென்பொருள்" திருச்சி மாநகர காவல் துறையில் தொடங்கப்பட்டது.

காவல்துறையின் பயன்பாட்டிற்காக “முக அடையாளம் கண்டறியும் மென்பொருள்” திருச்சி மாநகர காவல் துறையில் தொடங்கப்பட்டது.

திருச்சி – அக் – 07,2021

செய்‌‌‌தியாளர்‌‌‌ – எஸ்‌‌‌.எம்‌‌‌.பாரூக்

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் கடந்த 04.10.2021-ஆம் தேதி தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு காவல் துறையின் பயன்பாட்டிற்காக “முக அடையாளம் கண்டறியும் மென்பொருளை” தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் அவர்களின் மேலான உத்தரவின்பேரில், திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், இ.கா.ப., மேலான அறிவுரைகளின்படி, “முக அடையாளம் கண்டறியும் மென்பொருள்” (FRS-Face Recognition Software) “துவக்க விழா இன்று 06.10.2021-ஆம் தேதி காலை 11.00 மணிக்கு, திருச்சி மாநகர காவல் ஆணையர் துவங்கப்பட்டது. பின்னர், திருச்சி மாநகர காவல் அலுவலகத்தில் உள்ள கலந்தாய்வுக் கூட்டஅரங்கத்தில், மேற்குறிப்பிட்ட முக அடையாளம் கண்டறியும் மென்பொருளை எவ்வாறு செயல்படுத்துவது என்பது பற்றி திருச்சி மாநகர காவல் நிலையங்களில் பணிபுரியும் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் நிலைய காவல் ஆளிநர்களுக்கு விளக்கமாக எடுத்துக்கூறி திருச்சி மாநகர காவல் ஆணையர் பேசினார்

இதனை தொடர்ந்து, மேற்படி காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு, திருச்சி மாநகர-மாநில குற்ற ஆவண காப்பக இணைப்பு பணி காவல் ஆளிநர்களால் 3 பகுதிகளாக வகுப்புகள் எடுக்கப்பட்டது. முதல் கட்டமாக இன்று 05.10.21-ஆம் தேதி காலை வேளையில் 59 காவல் அலுவலர்களுக்கும், மதிய வேளையில் 55 காவல் அலுவலர்களுக்கும் வகுப்புகள் எடுக்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக நாளை 07.10.21-ஆம் தேதி காலை வேளையில் 55 காவல் அலுவலர்களுக்கு வகுப்புகள் எடுக்கப்பட உள்ளது.

இந்த FRS மென்பொருளானது ஒரு தனி நபரின் புகைப்படத்தினை காவல் நிலையங்களில் CCTNS-ல் (Crime and Criminal Tracking Network & System) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள நபர்களின் புகைப்பட தரவுகளோடு ஒப்பிட்டு அடையாளம் கண்டறிய பயன்படுகிறது.

இந்த மென்பொருளை காவல் நிலையத்தில் இணையதள வசதியுள்ள கணிணியிலும், களப்பணியின் போது கைப்பேசியிலும் காவல் அலுவலர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இச்செயலியின் மூலம் குற்றவாளிகள், சந்தேக நபர்கள், காணாமல் போனவர்கள் மற்றும் அடையாளம் தெரியாத உடல்கள் ஆகிய புகைப்படங்களை தரவுகளில் உள்ள புகைப்படங்களுடன் ஒப்பிட்டு அடையாளம் கண்டறியலாம். இச்செயலியின் மூலம் ஒப்பீடு செய்யப்பட்ட புகைப்படத்தில் உள்ள நபர், வேறொரு காவல் நிலைய வழக்கில் தொடர்புடையவராக இருந்தால் இச்செயலியின் மூலமே சம்மந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு அந்நபரை பற்றிய தகவல் அனுப்பும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.இச்செயலியை பயன்படுத்தி காவல் அலுவலர்கள் ரோந்து பணி, வாகன தணிக்கை மற்றும் இதர காவல் பணிகளை மேற்கொள்ளும் போது குற்றவாளிகள்/சந்தேகத்திற்குரிய நபர்களின் புகைப்படம் மூலமாக அவர்களின் முழு குற்றப்பின்னணியையும் எளிதாக தெரிந்துகொள்ளலாம். மேலும் சந்தேக நபர்களை பிடித்து விசாரிக்கும் போது அவர்களின் மீது பிடியாணை நிலுவையில் உள்ளதா என்பதை கண்டறிந்து, கைது செய்து நடவடிக்கையும் மேற்கொள்ளலாம். அத்துடன் காணாமல் போன நபர்களையும் இச்செயலி மூலம் கண்டறிந்து உரியவர்களிடம் ஒப்படைக்க வழிவகை ஏற்படும். இந்த FRS செயலியானது குற்றங்களை கண்டுபிடிக்கவும், குற்றத்தடுப்பு வழிகளைசெவ்வனேமேற்கொள்ளவும் காவல்துறையினருக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

இந்நிகழ்வில், திருச்சி காவல் துணை ஆணையர் சட்டம் ஒழுங்கு சக்திவேல் மற்றும் துணை ஆணையர் குற்றம் மற்‌‌‌றும்‌‌‌ போக்குவரத்து பிரிவு முத்தரசு கலந்துகொண்டு “முக அடையாளம் கண்டறியும் மென்பொருள்” (FRS-Face Recognition Software) குறித்தும், அதை எவ்வாறு செயல்படுத்துவது என்பது பற்றியும் பேசினர்‌‌‌

19,724FansLike
84FollowersFollow
388SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லை மார்கெட்டில் முன்விரோத கொலையில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது

0
நெல்லை மாநகரம் - மே-23,2022 நெல்லை மாநகரம் தச்சநல்லூர் மார்க்கெட்டில் முன்விரோதம் காரணமாக கொலையில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது. திருநெல்வேலி மாவட்டம் மானூர் சுப்பையாபுரம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த...

“குவாரியில் சிக்கியிருந்த 4,நபர்களின்‌‌‌ உடல்கள் 8,நாட்களுக்கு பிறகு காவல்துறை, தீயனைப்புதுறை மற்‌‌‌றும்‌‌‌...

0
திருநெல்வேலி - மே -23,2022 திருநெல்வேலி குவாரி விபத்தில் சிக்கியிருந்த 6 நபர்களில் 2 நபர்களை உயிருடனும் 4 நபர்களின் உடலை 8 நாட்கள் தொடர் மீட்புபணிக்கு பின் மீட்ட காவல்துறையினர், தீயணைப்பு துறையினர்...

மூத்தோர் தடகள போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு எஸ்பி பாராட்டு

0
விழுப்புரம் - மே- 23,2022 அகில இந்திய அளவிலான மூத்தோர் தடகளப் போட்டியில் பதக்கம் வென்ற விழுப்புரம் மாவட்ட விளையாட்டு வீரர்கள் காவல் கண்காணிப்பாளர் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். கடந்த 20,21,22 ஆகிய...

இறகுபந்து போட்டியில்‌‌‌ தங்க பதக்கம் வென்ற காவல் ஆய்வாளருக்கு போலீஸ் கமிஷனர் பாராட்டு!!!!

0
மதுரை - மே-23,2022 திருவனந்தபுரத்தில் நடந்து வரும் 4வது தேசிய மூத்தோர் விளையாட்டு போட்டி 18.05.2022 துவங்கி 22.05.2022 அன்று நிறைவு பெற்றது. இதில் வயது வாரியான போட்டிகளில் அனைத்து மாநிலங்களிலும் பங்கேற்றனர். இப்போட்டியில்...

ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில்‌‌‌ உயிழந்தவர்களின் நினைவு நாளை முன்னிட்டு 2500 போலீசார்‌‌‌...

0
தூத்துக்குடி - மே -20,2022 தூத்துக்குடி தனியார் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின்போது உயிரிழந்தவர்களின் 4ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் திருநெல்வேலி...

தற்போதைய செய்திகள்