அரியலூர் -அக்-01,2021
அரியலூர் மாவட்டத்தில் பொது மக்களின் பாதுகாப்பை மேலும் உறுதி செய்யும் வகையில் 24 மணி நேரமும் செயல்படும் திட்டம் துவங்கப்பட்டது
அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் தமிழக காவல்துறை இயக்குநர் திரு. சைலேந்திரபாபு இ.கா.ப., உத்தரவின்படி திருச்சி சரக காவல்துறை துணைத்தலைவர் சரவணன் சுந்தர் I.P.S., தலைமையில் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
பெரோஸ்கான் அப்துல்லா முன்னிலையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று Police Beat திட்டம் தொடங்கி வைத்து திருச்சி சரக காவல்துறை துணை தலைவர் அவர்கள் கூறியதாவது:
டி.ஐ.ஜி பேசியதாவது :
கிராமங்களில் வசிக்கும் பொது மக்கள் தங்களது குறைகளை எளிதாக காவல்துறையினரிடம் தெரிய படுத்தவும், சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் நடைப்பெறாமல் தடுக்கவும், கிராமப்புறங்களில் குற்றம் நடைப்பெறாமல் இருக்கவும், பொது மக்கள் தெரிவிக்கும் புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கும் வகையிலும், காவலர்கள் செயல்பட வேண்டும் என்றும். பொதுமக்களுக்கு காவல்துறை 24 மணிநேரமும் தங்களுடன் இருக்கிறது என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக இந்த ரோந்து திட்டம் துவங்கி வைக்கப்பட்டுள்ளது என்று சிறப்புரை ஆற்றினார்
[01/10, 8:20 pm] +91 94982 12016: இந்த திட்டத்தில் மாவட்டம் முழுவதும் 18 வாகனங்கள் 54 சட்ட ஒழுங்கு காவலர்களும் கூடுதலாக 18 ஊர்க்காவல் படையினரையும் கொண்டு பின்வரும் பணிகளை தொடர்ந்து 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணித்து வரும்.
முக்கிய பகுதிகளில் ரோந்து
ஒதுக்கப்பட்ட கிராமங்களை தொடர்ந்து கண்காணிப்பது, வங்கிகளின் பாதுகாப்பை கண்காணித்து வருதல், பள்ளிகள், கல்லூரிகள், விடுதிகள், முதியோர் தங்கும் விடுதிகள், குழந்தைகள் இல்லம், லாட்ஜ், கோவில்கள், மசூதிகள், ஜர்ஜ்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையம், நிறுவனங்கள், குற்றவழக்கு உடையவர்களை கண்காணித்தல், அதிகம் குற்றம் நடக்கும் பகுதிகளை கண்காணித்தல், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் பகுதிகளை கண்காணித்தல், கள்ளத்தனமாக மது விற்பனை செய்பவர்களை கண்காணித்தல், திறந்த வெளிப் பகுதி மற்றும் பாழடைந்த பகுதிகளை கண்காணித்தல், விபத்து அதிகம் நேரிடும் (BLACK SPOT) பகுதிகளை கண்காணித்தல், வாகன சோதனைகள் நடைபெறும் (குறைந்தது 10) இடங்களை கண்காணித்தல், டைனமிக் சோதனைச் சாவடிகளை கண்காணித்தல், உரிமம் பெற்று துப்பாக்கிகள் வைத்திருக்கும் நபர்களை கண்காணித்தல், வெடி மருந்துகள் விற்பனை செய்யும் மற்றும் பாதுகாக்கப்படும் இடங்களை கண்காணித்தல், போன்ற பணிகளை கண்காணித்து குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் முன்கூட்டியே தடுக்கும் வகையில் இத்திட்டமானது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் விஜயகுமார், . திருமேனி மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் காவலர்கள் கலந்து கொண்டனர்.