81.9 F
Tirunelveli
Tuesday, June 28, 2022
முகப்பு மாவட்டம் சிந்திப்போம் சிறப்போம் என்ற புதிய செயல்முறை திட்டத்தை இராணிபேட்டை எஸ்‌பி தொடங்கிவைத்தார்

சிந்திப்போம் சிறப்போம் என்ற புதிய செயல்முறை திட்டத்தை இராணிபேட்டை எஸ்‌பி தொடங்கிவைத்தார்

இராணிபேட்டை – அக் – 27,2021

இராணிப்பேட்டை மாவட்டத்தில் காவல்துறையினர் மற்றும் பொது மக்களை அன்றாடம் சந்திக்கும் பொது பிரச்சனைகள் குறித்து சிந்திக்கவும், அதற்கு தீர்வு காண முயற்சிக்க ஊக்குவிக்கும் வகையிலும், சமூக காவல் (Community Policing) நடைமுறையை மேம்படுத்தவும் “Think & Shine *சிந்திப்போம் சிறப்போம்” என்ற புதிய செயல்முறை இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை மூலம் துவங்கப்பட்டுள்ளது. இந்த சமூக காவல் செயல்முறை குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

தீபா சத்யன், இ.கா.ப., கூறியதாவது.

சமூகத்தில் அன்றாடம் மக்கள் சந்திக்கும் பொது பிரச்சனைகள் (சட்டம்-ஒழுங்கு. குற்ற நிகழ்வுகள், ஆதாட்டம், போதை பொருட்கள் விற்பணை, விபத்து, குழந்தை தொழிலாளர் முறை, குழந்தை திருமணம், போக்குவரத்து நெரிசல், திருட்டு, வழிப்பறி, கள்ளச்சாராயம், சைபர் குற்றங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் கல்வி மேம்பாடு. முத்த குடிமக்கள் நலன் மற்றும் சமூகத்தை பாதிக்கும் விடயங்கள்) குறித்து காவல்துறையினர் மற்றும் பொது மக்கள் சிந்திக்கவும். அதற்கு தீர்வு காண அவர்களை ஊக்குவிக்கவும், “Think & Shine” “சிந்திப்போம் சிறப்போம்” என்ற புதிய செயல்முறை நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் காவல் ஆளிநர்கள் மற்றும் பொது மக்களுக்கு மேற்படி பிரச்சனைகளுக்கு புதிய சிந்தனைகள் மூலம் புதிய தீர்வுகள், யோசனைகள் வழங்கவும், அவர்கள் சமூகம் சார்ந்து சிந்திக்கவும் வாய்ப்பு ஏற்படுத்தி தருவதின் மூலம் ஒரு ஆரோக்கியமான போட்டியினை உருவாக்குவதோடு, சமூக சிந்தனையாளர்களை அங்கீகரிக்கவும். இந்த நடைமுறை அமல் படுத்தப்பட்டுள்ளது. காவல்துறையினர் மற்றும் பொது மக்கள் தங்கள் திருத்த நினைக்கும் பிரச்சனை, அதற்குன்டான தீர்வு காண அவர்கள் முன்வைக்கும் திட்டம் குறித்த விளக்கத்தினை எழுத்து மூலமாகவோ / தட்டச்சு செய்தோ, மாவட்ட காவல் அலுவலகத்தில், இத்திட்டத்திற்கான பொறுப்பு அலுவலர் – திரு.ஜீ.வி.சிலம்பரசன், மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் முகாம் உதவியாளர், அவர்களிடம் நேரடியாக வழங்கலாம். [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாகவும் அனுப்பலாம். மேலும் இது குறித்த கூடுதல் தகவல்கள் / சந்தேகங்களுக்கு 7845457095 என்ற கைப்பேசி எண்ணில் அழைத்தும் உதவி பெறலாம். மேலும் இந்த நடைமுறைக்கு அளிக்கப்படும் மாற்று சிந்தனைகளின் நடைமுறை சாத்திய கூறுகளை ஆராய்ந்து, சிறந்த செயல்முறைகளை அதை முன்மொழிந்தவர் மூலமாகவே நடைமுறைப்படுத்தப்படும், மேலும் அதன் விவரங்கள் பத்திரிக்கை செய்தியாக வெளியிடப்பட்டு, அவர்களின் திறமையும், சிந்தனையும் அங்கீகரிக்கப்படுவதோடு, மாதாந்திர குற்ற ஆய்வு கூட்டத்தின் போது பரிசுகளும் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

19,724FansLike
89FollowersFollow
387SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லையில் தொடர் திருட்டில் ஈடுபட்ட இரண்டு்‌‌‌ பேர் சிக்கினர்‌‌‌ தனிப்‌‌‌படை போலீசாருக்கு துணை...

0
நெல்லை மாநகரம் - ஜீன் -27,2022 நெல்லை மாநகரம் பெருமாள்புரம் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட செயிண்ட் தாமஸ் நகர், கற்பகவிநாயகர் நகர், கார்த்திகேயன் நகர், ஜெயராஜ் அன்னபாக்கியம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நம்பிநகர், மகிழ்ச்சி நகர்...

நெல்லையில்‌‌‌ திருமண இணையதளத்தில் பண மோசடி அதிரடியாக பணத்தை மீட்ட சைபர் க்‌‌‌ரைம்...

0
திருநெல்வேலி - 27,2022 தமிழக முதல்வர் அறிவுரையின் படி மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் மனு அளித்த நபருக்கு இணையவழி மூலமாக ஏமாற்றப்பட்ட ரூ.1 இலட்சத்து 24...

நெல்லையில் கீழே கிடந்த பணப்பையை நேர்மையுடன் காவல்நிலையத்தில் ஒப்படைத்த இளைஞருக்கு துணை கமிஷனர்...

0
நெல்லை மாநகரம் - ஜீன் -27,2022 நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் கிடந்த பணப்பையை நேர்மையுடன் காவல் நிலையத்தில் ஒப்படைத்த அரசு போக்குவரத்து கழக நடத்துனரை பாராட்டி கௌரவித்த நெல்லை மாநகர கிழக்கு காவல்...

நெல்லையில் இன்று சாலை விபத்து ஏற்பட்ட பகுதியில் துணை கமிஷனர் நேரில்...

0
நெல்லை மாநகரம் - ஜீன் -25,2022 நெல்லை மாநகரம் ராஜகோபாலநகர் பகுதியில் நான்கு வழி சாலையில் இன்று சாலை விபத்து ஏற்பட்ட சம்பவ இடத்தைநெல்லை மாநகர கிழக்கு காவல் துணை ஆணையாளர் V.R.ஸ்ரீனிவாசன் ...

சர்வதேச போதை பொருள்‌ ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மணற்சிற்ப கண்காட்சியை போலீஸ்‌‌‌ கமிஷனர்‌‌‌ துவக்கிவைத்தார்

0
சென்னை -ஜீன் -25,2022 சென்னை பெருநகர காவல் ஆணையாளர். சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, மெரினா கடற்கரையில், பள்ளி மாணவர், மாணவியருடன் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் மணற்சிற்ப கண்காட்சியை...

தற்போதைய செய்திகள்