கோயம்புத்தூர் – அக் -22,2021
கோவை மாவட்டம் பொள்ளாச்சி உட் கோட்டத்தில் Boys & Girls Club களை துவங்கி வைத்து, மரக்கன்றுகளை நட்டு, குழந்தைகளுக்கு அறிவுரை வழங்கிய கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் இ.கா.ப., இன்று மாலை 17.00 மணிக்கு பொள்ளாச்சி உட்கோட்டத்தில் பொள்ளாச்சி கிழக்கு மற்றும் மேற்கு காவல் நிலையத்துக்கு உட்பட்ட காவலர் திருமண மண்டபம் மற்றும் MHS பள்ளியின் உள்ளே சிறுவர் மற்றும் சிறுமியருக்கான Boys’& Girls Club- ஐ துவங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுமார் 60-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கும் Boys & Girls Club-ன் நன்மைகள் பற்றியும் அதில் உறுப்பினர் ஆவதற்குரிய விதிமுறைகளைப் பற்றியும், காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தான் கடந்து வந்த பாதையையும்,IPS அதிகாரியான அனுபவங்களையும் குழந்தைகளுடன் பகிர்ந்து கொண்டார்.Boys&Girls Club-ஐ கண்காணிப்பதற்கு Scout Master,Care Taker(girls) நியமிக்கப்பட்டுள்ளனர் . அங்கு குழந்தைகள் விளையாடுவதற்கான உள் மற்றும் வெளி விளையாட்டு பொருட்களும்,அறிவை வளர்த்துக் கொள்வதற்கு சுமார் 200 புத்தகங்கள் அடங்கிய நூலகம் உள்ளது. உடற்பயிற்சி மற்றும் தற்காப்பு கலைகளும் கற்றுத்தரப்படுகிறது.
இந்நிகழ்ச்சியை தொடர்ந்து பொள்ளாச்சி உட்கோட்ட அலுவலகத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்க முன்மாதிரியாக இருக்கவேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுரை கூறியும் இரண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார். அதனைத் தொடர்ந்து பொள்ளாச்சி உட்கோட்ட காவல் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு காவல் துணை கண்காணிப்பாளர் செல்வி. தமிழ்மணி அவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.