93.9 F
Tirunelveli
Friday, August 12, 2022
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி "பிணைப்பத்திரத்தை மீறிய நபருக்கு சிறை இன்ஸ்பெக்டருக்கு எஸ்பி பாராட்டு...

“பிணைப்பத்திரத்தை மீறிய நபருக்கு சிறை இன்ஸ்பெக்டருக்கு எஸ்பி பாராட்டு…

தூத்துக்குடி – அக் -29,2021

ஆழ்வார்திருநகரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் திருச்செந்தூர் உட்கோட்ட நடுவர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர்‌‌‌ முன்பு எழுதிக் கொடுத்த பிணைப்பத்திரத்தை மீறி வன்முறையில் ஈடுபட்டவர் குற்ற விசாரணை நடைமுறைச் சட்டப்படி சிறையில் அடைப்பு – துரிதமாக நடவடிக்கை எடுத்த ஆழ்வார்திருநகரி காவல் நிலைய போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டு.

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அழகியமணவாளபுரம், செம்பூர் பகுதியைச் சேர்ந்த முத்தையா மகன் கோட்டாளம் (எ) கோபால் என்பவரை ஆழ்வார்திருநகரி காவல்நிலைய போலீசார் 16.03.2021 அன்று குற்ற விசாரணை நடைமுறைச் சட்டப்பிரிவு 107ன்படி திருச்செந்தூர் உட்கோட்ட நிர்வாக நடுவர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தி, நீதிமன்றத்தில் மேற்படி கோட்டாளம் (எ) கோபால் என்பவரிடம் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் 1 வருட காலத்திற்கு குற்ற செயல்களில் ஈடுபடமாட்டேன் என்று பொது அமைதியைக் காப்பதற்கு பிணைத்தொகை ரூபாய் 15,000/- நிர்ணயம் செய்து அன்றைய தினமே பிணைப்பத்திரம் எழுதி பெறப்பட்டது.

மேற்படி பிணைப்பத்திரம் பெறப்பட்ட 1 வருட காலம் முடிவதற்குள் கடந்த 15.10.2021 அன்று ஆழ்வார்திருநகரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் திருக்களுர் அருந்ததியர் காலனியைச் சேர்ந்த ராமர் மகன் சேகர் என்பவரை அவதூறாக பேசி மதுபாட்டிலால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டு, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து ஆழ்வார்திருநகரி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து கோட்டாளம் (எ) கோபாலை கைது செய்து தூத்துக்குடி பேரூரணி சிறையில் அடைத்தனர்.

ஆகவே தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் குற்ற விசாரணை நடைமுறைச் சட்டப்பிரிவு 107ன்படி எழுதிப் பெறப்பட்ட பிணைப்பத்திரத்தை மீறி 1 வருடம் முடிவதற்குள் மேற்படி கோட்டாளம் (எ) கோபால் குற்ற செயலில் ஈடுபட்டுள்ளதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசனுக்‌‌‌கு உத்தரவிட்டார்.

அதன் பேரில் ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் மேற்பார்வையில் ஆழ்வார்திருநகரி காவல் நிலைய ஆய்வாளர் ஜுடி கோட்டாளம் (எ) கோபால் மீது குற்ற விசாரணை நடைமுறைச்சட்டப்பிரிவு 110ன் படி நடவடிக்கை எடுக்க கோவில்பட்டி உட்கோட்ட நிர்வாக நடுவர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அவர்களிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.

அதனடிப்படையில் மேற்படி கோட்டாளம் (எ) கோபால் மீது குற்றவியல் நடைமுறைச்சட்டம் 122(1)(B)யின்படி 15.03.2022 வரை அல்லது சட்டப்படி வேறு நீதிமன்ற ஆணைப்படி விடுவிக்கப்படும் வரை சிறைக்காவலில் நீட்டிக்கபட்டு திருச்செந்தூர் முதல் வகுப்பு உட்கோட்ட நடுவர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் கோகிலா உத்தரவிட்டுள்ளார்.

எனவே தற்போது தூத்துக்குடி பேரூரணி சிறையில் விசாரணை கைதியாக வைக்கப்பட்டுள்ள கோட்டாளம் (எ) கோபாலின் சிறைக்காவல் நீட்டிப்பு செய்து, அதற்கான உத்தரவு சார்பு செய்யப்பட்டது. துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்த ஆழ்வார்திருநகரி காவல் நிலைய ஆய்வாளர் ஜுடி மற்றும் போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாள் எஸ். ஜெயக்குமார் பாராட்டினார்.

19,724FansLike
99FollowersFollow
388SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லை மேலப்பாளையத்தில் குட்கா பொருட்‌‌‌கள்‌‌‌ விற்‌‌‌பனை செய்‌‌‌த கடைக்கு போலீஸ்‌‌‌ துணை கமிஷனர்‌‌‌ சீல்!!!

0
நெல்லை - ஆகஸ்ட் -12,2022 நெல்லை மேலப்பாளையத்தில் குட்கா பொருட்‌‌‌கள்‌‌‌ விற்‌‌‌பனை செய்‌‌‌த கடைக்கு போலீஸ்‌‌‌ துணை கமிஷனர்‌‌‌ சீல் மேலப்பாளையம் சந்தை ரவுண்டானா அருகில் கிருஷ்ண குமார் என்பவரின் கடை சீல் வைக்கப்பட்டது குட்கா...

நெல்லை தூய சவேரியர்‌ பள்ளியில் போதைப்‌‌‌பழக்‌‌‌கத்‌‌‌தால்‌‌‌ ஏற்படும் விளைவுகள் குறித்து துணை...

0
நெல்லை - ஆகஸ்ட் -11,2022 நெல்லை பாளையில் போதை பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அறிவுரைகளை வழங்கிய நெல்லை மாநகர கிழக்கு காவல்...

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் மாவட்ட எஸ்பி போதைப்பொருள் விழிப்புணர்வு

0
தூத்துக்குடி - ஆகஸ்ட் - 11,2022 தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்றது. போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவதற்கு...

ஆற்றில் விழுந்த ஆசிரியரின் உயிரை காப்பாற்றிய காவலருக்கு மாவட்ட எஸ்பி பாராட்டு

0
திருவாருர் - ஆகஸ்ட் - 11,2022 மகிழஞ்சேரி, ஆதிலட்சுமி நகரைச்சேர்ந்த உஷா, க/பெ தினேஷ்குமார் என்பவர் ஆணைகுப்பம் தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 08.08.2022 தேதி ஸ்கூட்டரில் சென்ற போது எதிரே...

மெச்சதகுந்த பணிக்காக போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்றிதழ் வழங்கி பாராட்டு!!!

0
தேனி - ஆகஸ்ட் -10,2022 மெச்சத்தகுந்த பணியை பாராட்டி காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கிய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேனி மாவட்டம்போடி நகர் காவல் நிலையம் மற்றும் பழனிசெட்டிபட்டி காவல்...

தற்போதைய செய்திகள்