80.5 F
Tirunelveli
Monday, November 29, 2021
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி கந்துவட்டி வசூல்செய்தால் குண்டர் சட்டம் உறுதி - மாவட்ட எஸ்.பி எச்சரிக்கை

கந்துவட்டி வசூல்செய்தால் குண்டர் சட்டம் உறுதி – மாவட்ட எஸ்.பி எச்சரிக்கை

தூத்துக்குடி – அக் -22,2021

தட்டப்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கந்து வட்டி வசூலித்து கடன் நெருக்கடியால் ஒருவர் தற்கொலை செய்த வழக்கில் மேலும் ஒருவர் கைது – ஏற்கனவே இருவர் கைது செய்யப்பட்டு, ஓருவர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைப்பு – கந்துவட்டி வசூலிப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் எச்சரிக்கை.

தூத்துக்குடி மாவட்டம் தட்டப்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திம்மராஜபுரம் பகுதியை சேர்ந்த பிரம்மராஜன் (55) என்பவர் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த பிச்சாண்டி மகன் சிவசிதம்பரம் என்பவரிடம் வங்கி வட்டிக்கு கடன் ரூபாய் 3,50,000/- கடன் பெற்றுள்ளார். பின் சிவசிதம்பரம் அதை கந்துவட்டியாக மாற்றியுள்ளார். அதனால் அந்தக் கந்து வட்டி கடனை அடைப்பதற்கு கடன் பெற்ற பிரம்மராஜன் பேரூர் பகுதியை சேர்ந்த கணபதி மகன் அருணாசலம் (45) என்பவரிடமும் பத்மநாபமங்கலத்தை சேர்ந்த லட்சுமணன் மகன் பார்த்திபன் (31) என்பவரிடமும் அதிக வட்டிக்கு பணத்தை கடனாக வாங்கி மேற்படி சிவசிதம்பரத்திடம் கொடுத்து வந்துள்ளார். மேற்படி பிரம்மராஜன் வாங்கிய கடன் ரூபாய் 3,50,000/-க்கு சிவசிதம்பரத்திடம் இதுவரை ரூபாய் 10,00,000/- (பத்து லட்சம்) திருப்பி செலுத்தியுள்ளார். இருப்பினும் அசல் தொகையில் ரூபாய். 1,00,000/- (ஒரு லட்சம்) மட்டுமே கழிந்துள்ளதாக கூறி, மீதி பணம் ரூபாய 9,00,000/- த்தை (ஒன்பது லட்சம்) உடனே திருப்பித் தரவேண்டும் என்று கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இந்நிலையில் பார்த்திபன் மற்றும் அருணாசலம் ஆகிய இருவரும், தாங்கள் கொடுத்த கடனை திருப்பி தருமாறு கேட்டு பிரம்மராஜனுக்கு அவர்களும் நெருக்கடி கொடுத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனையடுத்து 13.09.2021 அன்று இரவு சிவசிதம்பரத்தால் அனுப்பி வைக்கப்பட்ட இருவர் பிரம்மாஜனின் வீட்டிற்கு வந்து அவரிடம் கடனை திருப்பி தராவிட்டால் கொலை செய்து விடுவோம் என்று கொலை மிரட்டல் விடுத்து சென்றதையடுத்து, மனமுடைந்த பிரம்மராஜன் வர்த்தகரெட்டிபட்டி பகுதியில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பிரம்மராஜனின் மனைவி ரேவதி (47) என்பவர் அளித்த புகாரின் பேரில் தட்டாப்பாறை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் தூத்துக்குடி ஊரக உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் சந்தீஸ் இ.கா.ப அவர்கள் தலைமையில் உதவி ஆய்வாளர் பிரடரிக்ராஜன், நாலாட்டின்புதூர் காவல் நிலைய தலைமை காவலர் மணிகண்டன், தட்டார்மடம் காவல் நிலைய தலைமை காவலர் மணிகண்டன், செய்துங்கநல்லூர் காவல் நிலைய முதல் நிலை காவலர் காசி, புதூர் காவல் நிலைய காவலர் பிரபு பாண்டியன் மற்றும் ஆயுதப்படை காவலர் கணேசன் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசாரை விசாரணை மேற்கொண்டு, இதில் சம்மந்தப்பட்டவர்களை விரைந்து கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின்பேரில் மேற்படி தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு ஸ்ரீவைகுண்டம் கீழ கோட்டைவாசல் தெருவைச் சேர்ந்த கணபதி மகன் அருணாச்சலம் (45) என்பவரையும், ஸ்ரீவைகுண்டம் பத்மநாபமங்கலம் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் மகன் பார்த்திபன் (31) என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இதில் அருணாச்சலம் என்பவர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இவ்வழக்கின் மற்றொரு எதிரியான ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த பிச்சாண்டி மகன் சிவசிதம்பரம் (45) என்பவரை மேற்படி தனிப்படை போலீசார் தஞ்சாவூரில் வைத்து நேற்று கைது செய்தனர்.

கந்து வட்டி வசூலிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கபடுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.

19,724FansLike
54FollowersFollow
370SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லை மேலப்பாளையம் “போலீசாருக்கு” பொதுமக்கள் பாராட்டு…

0
திருநெல்வேலி - நவ -28,2021 செய்தியாளர் - இம்ரான் திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் உள்‌‌‌ள சாலைகளை மாடுகள் ஆக்கிரமித்து வாகன ஓட்‌‌‌டிகளுக்‌‌‌கு பெரும்‌‌‌ இடையூறாகவும்‌‌‌ அடிக்‌‌‌கடி விபத்து்‌‌‌ ஏற்‌‌‌படுத்‌‌‌துவதாகவும்‌‌‌ பொதுமக்கள் பலமுறை...

மழை வெள்ளத்தால் பாதிக்கபட்டுள்ள குடியிருப்பு பகுதி மக்களை மாவட்ட...

0
தூத்துக்குடி - நவ -28,2021 தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை காரணமாக சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராம்நகர், ரஹ்மத் நகர் மற்றும் முத்தம்மாள் காலனி பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளதையடுத்து, அப்பகுதி மக்கள் அத்தியவாசியத்...

போதை பழக்கத்தால்‌‌‌ பாதிக்‌‌‌கபட்‌‌‌டவர்கள்‌‌‌ மீள்‌‌‌வதற்‌‌‌கு மாவட்ட எஸ்பி தலைமையில் ஆலோசனை...

0
அரியலூர் - நவ -28,2021 அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் போதை பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மறு வாழ்விற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில்...

கனமழை பெய்துவருவதால் காவல்நிலையம் மற்றும் காவலர் குடியிருப்புகளின்‌‌‌ கட்‌‌‌டிடங்‌‌‌களின்‌‌‌ உறுதிதன்‌‌‌மையை மாவட்ட...

0
திருவாரூர் - நவ -28,2021 திருவாரூர் மாவட்ட காவல்துறைகனமழை காரணமாககாவல் நிலையம் மற்றும் காவலர் குடியிருப்புகளில்பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்.ஆயுதப்படை குடியிருப்புகளைமாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு திருவாரூர் மாவட்ட ஆயுதப்படையில்311-காவலர் குடியிருப்புகள்...

போலி ஆவணம் மூலம் அபகரிக்கப்பட்ட நிலம் மீட்‌‌‌பு – மாவட்ட எஸ்பி உரியவரிடம் ஒப்படைத்தார்‌

0
தென்காசி - நவ -27,2021 போலி ஆவணம் மூலம் அபகரிக்கப்பட்ட நிலம் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவின் உதவியுடன் மீட்பு தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் அமைந்துள்ள நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவில்...

தற்போதைய செய்திகள்