78.7 F
Tirunelveli
Monday, October 18, 2021
முகப்பு மாவட்டம் சென்னை முதியோர் மீட்பு பணிக்கு தொண்டு நிறுவனம் - பெருநகர போலீஸ் கமிஷனரிடத்தில் நிதியுதவி வழங்கினர்

முதியோர் மீட்பு பணிக்கு தொண்டு நிறுவனம் – பெருநகர போலீஸ் கமிஷனரிடத்தில் நிதியுதவி வழங்கினர்

சென்னை – அக் -05,2021

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் , சென்னை பெருநகர காவல் உதவி மையத்தில் அங்கம் வகிக்கும் Help Age India அரசு சாரா முதியோர் நல அமைப்பினருக்கு, ஶ்ரீராம் குழுமம் மற்றும் அதுல்யா நிறுவனத்தினர் முதியோர் மீட்பு பணிக்கு ரூபாய் 4.5 லட்சத்துக்கான காசோலைகளை வழங்கினார்.

சென்னை பெருநகர காவல்துறையில், பெண்கள் உதவி மையம் எண்.1091, முதியோர் உதவி மையம் எண்.1253 மற்றும் குழந்தைகள் உதவி மையம் 1098 ஆகியவை செயல்பட்டுக் கொண்டு, பெண்கள் மற்றும் முதியோர் குறித்து வரும் உதவி அழைப்புகளுக்கு காவல் குழுவினர் மற்றும் காவல் உதவி மையத்தில் அங்கம் வகிக்கும் அரசு மற்றும் அரசு சாரா தன்னார்வ தொண்டு அமைப்பினருடன் (NGO) ஒருங்கிணைந்து செயல்பட்டு, மீட்பு பணியில் ஈடுபட்டு, அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர். மேலும், சென்னை பெருநகர காவல் துறையில் கடந்த 21.04.2021 அன்று சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களால் “காவல் கரங்கள்” என்ற அமைப்பு தொடங்கப்பட்டு, சென்னை பெருநகரில் ஆதரவில்லாமல் சுற்றி திரியும் மனநிலை மற்றும் உடல் நிலை பாதிக்கப்பட்டவர்கள், முதியோர்கள், பெண்கள், மற்றும் குழந்தைகளையும் கண்டறிந்து உரிய பாதுகாப்புடன் அரசு மற்றும் அரசு சாரா தன்னார்வ தொண்டு அமைப்பினர் (NGOs) மூலம் மீட்டு தேவைபடுவோருக்கு சிகிச்சை அளித்தும் அரசு மற்றும் தனியார் இல்லங்களில் தங்க வைத்தும், நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக. ஶ்ரீராம் குழுமத்தினர் மற்றும் அதுல்யா நிறுவனத்தினர் முதியோர் நலன் மற்றும் பராமரிப்புக்கு, சென்னை பெருநகர காவல்துறை உதவி மையத்தில், 2004ம் ஆண்டு முதல் அங்கம் வகித்து, காவல்துறையினருடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வரும் Help Age India என்ற முதியோர் நல அமைப்பினருக்கு (Elders help) பொருளாதார ரீதியாக உதவ முன்வந்தனர்.

அதன்பேரில், ஶ்ரீராம் குழுமத்தினர் மற்றும் அதுல்யா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு.கார்த்திக் நாராயணன் இணைந்து வழங்கிய ரூ.4,50,000/- க்கான காசோலைகளை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப. இன்று Help Age India அமைப்பின் தமிழகத்தின் இயக்குநர் வி.சிவகுமார் என்பவரிடம் வழங்கினார். உடன் சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் (தலைமையிடம்) முனைவர் ஜெ.லோகநாதன்,இ.கா.ப., காவல் உதவி மைய பொறுப்பு காவல் ஆய்வாளர் மற்றும் அதுல்யா நிறுவனத்தின் பெண் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

19,724FansLike
48FollowersFollow
361SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

ஆயுதபடை காவலர்களின்‌‌‌ பணி மாறுதலுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட எஸ்.பி தலைமையில்...

0
தூத்துக்குடி - அக் - 17,2021 தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்கள் தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடை பெற்றது. இன்று தூத்துக்குடி...

விபத்தில் காயமடைந்தவர்களுக்‌‌‌கு முதலுதவி செய்‌‌‌யும்‌‌‌ ஒத்‌‌‌திகை நிகழ்‌‌‌ச்‌‌‌சி மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி தலைமையில் நடைபெற்றது

0
தூத்துக்குடி - அக் -17,2021 இன்று உலக விபத்து காய தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி விவிடி சிக்னல் சந்திப்பில் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் தூத்துக்குடி காவல்துறை சார்பாக விபத்தில் காயம்...

கொலையை திறம்‌‌‌பட புலனாய்வு செய்‌‌‌து குற்‌‌‌றவாளியை கைது செய்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட...

0
திண்டுக்கல் - அக் - 17,2021 திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி அருகே கடந்த 10.10.2021 ஆம் தேதி சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் பிரேதம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதுதொடர்பாக தாண்டிக்குடி...

தேனி – காணாமல்போன 15,லட்‌‌‌சம்‌‌‌ மதிப்புள்ள செல்போன்கள் மீட்பு- மாவட்ட எஸ்‌.பி உரியவர்களிடம் ஒப்படைத்தார்

0
தேனி - அக் - 16,2021 சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான 125 காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்து மீட்டு உரியவர்களிடம் வழங்கிய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப.,...

போதைபொருள் குற்றங்களில் ஈடுபட்டு மனம்திருந்திய பெண்களின்‌‌‌ மறுவாழ்வுக்‌‌‌கான கூட்டம் திருச்‌‌‌சி ஐ.ஜி தலைமையில்...

0
பெரம்பலூர் - அக் - 16,2021 பெரம்பலூர் மாவட்டத்தில் மது, கள்ளச்சாராயம், போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபட்டு மனம் திருந்திய மகளிரின் மறுவாழ்வுக்கான சிறப்பு முகாம் பெரம்பலூர் நகரில் உள்ள கர்ணம் சகுந்தலா திருமண மண்டபத்தில்...

தற்போதைய செய்திகள்