திருநெல்வேலி – அக் -02,2021
நெல்லை மாநகர காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு இலவச மருத்துவ முகாமை தொடங்கி வைத்த நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அவர்கள்.
திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் முனைவர் செந்தாமரைக் கண்ணன் இ.கா.ப அவர்கள் தலைமையில், திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி முதல்வர் Dr.ரவிச்சந்திரன் ஏற்பாட்டில், அரசு மருத்துவ கல்லூரி இதயவியல் மருத்துவர்கள் Dr.ஜனனி பிரியா, Dr.கோகுல்நாத் மற்றும் குழந்தைகள் சிறப்பு மருத்துவர் Dr.ராம் நிவாஸ் மற்றும் குழுவினர் பெண்கள் சிறப்பு மருத்துவர்கள் Dr.அனிதா தேவி செவிலியர்கள் மற்றும் நெல்லை அரசு காவலர் மருத்துவமனை Dr.ஜவஹர் அவர்கள் மற்றும் மருத்துவ குழுவினர்கள் இணைந்து, பாளையங்கோட்டை அருன்ஸ் மகாலில் இன்று காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமில் இரத்த கொதிப்பு பரிசோதனை மற்றும் இரத்த பரிசோதனை, இருதயம் சம்பந்தப்பட்ட மருத்துவம் ECG, ECHO போன்ற பரிசோதனைகள் நடைபெற்றது. உடன் நெல்லை மாநகர குற்றம் மற்றும் போக்குவரத்து காவல் துணை ஆணையாளர் சுரேஷ்குமார் , CWC கூடுதல் காவல் துணை ஆணையாளர் சங்கர் நெல்லை மாநகர நுண்ணறிவு பிரிவு காவல் உதவி ஆணையாளர் நாகசங்கர் அவர்கள், பாளை உட்கோட்ட காவல் உதவி ஆணையாளர் பாலச்சந்திரன் , நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் பிரைச்சந்திரன் ஆயுதப்படை காவல் உதவி ஆணையாளர் முத்தரசு அவர்கள், காவல் ஆய்வாளர் மாநகர காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் சுமார் 200 பேர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்