திருநெல்வேலி – அக் – 04,2021
திருநெல்வேலி மாவட்டத்தில் வருகின்ற உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் IPS., தலைமையில் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
வருகின்ற உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு இன்று திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் இ.கா.ப தலைமையில் சேரன்மகாதேவி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கூனியூர் தொடங்கி காருகுறிச்சி மற்றும் நகரின் முக்கிய பகுதி வழியாக வந்து நிறைவு பெற்றது.
மேலும் இதேபோல் கொடி அணிவகுப்பு மானூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட யூனியன் அலுவலகத்தில் தொடங்கி மானூர் பஜார் மற்றும் அழகியபாண்டியபுரம் பஜார் முக்கிய பகுதிகள் வழியாக சென்று நிறைவு பெற்றது.
இதேபோல் வி.கே.புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிவந்திபுரத்திலிருந்து தொடங்கி அடையகருங்குளம் வரை கொடி அணிவகுப்பு நடைபெற்று நிறைவு பெற்றது.
இந்த கொடி அணிவகுப்பில் திருநெல்வேலி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மாரிராஜ், சேரன்மகாதேவி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பார்த்திபன், திருநெல்வேலி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஜெபராஜ், அம்பாசமுத்திரம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரான்சிஸ், மானூர் காவல் ஆய்வாளர் ராமர், காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் போலீசார் உட்பட 500 பேர் கொடி அணிவகுப்பில் கலந்து கொண்டனர்.