86 F
Tirunelveli
Friday, May 20, 2022
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி வாக்கு எண்ணிக்கை மையங்களில் மாவட்ட எஸ்‌‌‌.பி நேரில் ஆய்வு

வாக்கு எண்ணிக்கை மையங்களில் மாவட்ட எஸ்‌‌‌.பி நேரில் ஆய்வு

தூத்துக்குடி – அக் – 12,2021

தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவிற்கான வாக்கு எண்ணும் மையங்களில் போலீசாரின் பாதுகாப்பு பணிகளை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் நேரில் சென்று ஆய்வு.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 09.10.2021 அன்று 10 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் 38 வாக்குச்சாவடிகளில் (Polling Stations) இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதுதவிர தென்காசி மாவட்டத்திற்குட்பட்ட குருவிக்குளம் பஞ்சாயத்து யூனியனில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மேற்கு, நாலாட்டின்புதூர் மற்றும் கழுகுமலை ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 42 வாக்குசாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

மேற்படி நடந்து முடிந்த இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவிற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.

அதன்படி தூத்துக்குடி மாவட்டத்திற்கு தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு புதுக்கோட்டை யூனியன் அலுவலகத்திலும், திருச்செந்தூருக்கு, திருச்செந்தூர் யூனியன் அலுவலகத்திலும், உடன்குடிக்கு, உடன்குடி யூனியன் அலுவலகத்திலும், ஸ்ரீவைகுண்டத்திற்கு ஸ்ரீவைகுண்டம் யூனியன் அலுவலகத்திலும், கருங்குளத்திற்கு கருங்குளம் யூனியன் அலுவலகத்திலும், சாத்தான்குளத்திற்கு சாத்தான்குளம் யூனியன் அலுவலகத்திலும், ஓட்டபிடாரத்திற்கு ஓட்டபிடாரம் யூனியன் அலுவலகத்திலும், கயத்தாறுக்கு கயத்தாறு யூனியன் அலுவலகத்திலும், விளாத்திகுளத்திற்கு விளாத்திகுளம் யூனியன் அலுவலகத்திலும், புதூருக்கு புதூர் யூனியன் அலுவலகம் என மொத்தம் 10 இடங்களில் நடைபெற்று வருகிறது.

இது தவிர தென்காசி மாவட்டம் குருவிக்குளம் ஒன்றியத்திற்கு கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அய்யனேரி பகுதியில் உள்ள ஸ்ரீ உண்ணாமலை இன்ஜினியரிங் கல்லூரியிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

இந்த இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 2 உதவி காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் 7 காவல் துணை காண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் சுமார் 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேற்படி இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதை முன்னிட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் நேரில் சென்று பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்து வருகிறார்.

19,724FansLike
84FollowersFollow
388SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில்‌‌‌ எஸ்பி தலைமையில் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு

0
தூத்துக்குடி -மே -20,2022 ‘கொடுஞ்செயல் எதிர்ப்பு” நாளை முன்னிட்டு இன்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் உறுதிமொழி. ஒவ்வொரு ஆண்டும் மே...

நெல்லையில் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி போலீஸ் கமிஷனர் தலைமையில்...

0
நெல்லை மாநகரம் -மே - 20,2022 நெல்லை மாநகர காவல் ஆணையாளர் .சந்தோஷ் குமார் இ.கா.ப தலைமையில் காவல் அதிகாரிகள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள்...

விழுப்புரத்தில் காவல் உதவி செயலி விழிப்புணர்வு ஸ்‌‌‌டிக்‌‌‌கர்‌‌‌ ஒட்‌‌‌டும்‌‌‌ நிகழ்ச்சியில் அமைச்சர்,ஆட்சியர், மாவட்ட...

0
விழுப்புரம் -மே - 19,2022 தமிழக காவல்துறை சார்பில் பெண்கள் மற்றும் குழுந்தைகள், பொதுமக்கள் பாதுகாப்பிற்காகக் காவல்துறையை உடனடியாக தொடர்புக்கொள்ள தங்கள் கைபேசியில் "KAVAL UTHAVI APP": (செயலியை) பயன்படுத்திக் கொள்ளலாம் எனக் காவல்துறை...

தஞ்சாவூரில் 40,லட்சம் மதிப்புள்ள சுமார் 2000 கிலோ குட்கா பறிமுதல் 2,பேர் கைது தனிப்படை...

0
தஞ்சாவூர் - மே - 18,2022 செய்தியாளர் - சோமாஸ் கந்தன் தஞ்சாவூர் சரக டெல்டா மாவட்டங்களில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களை வெளி மாநிலங்களிலிருந்து கடத்தி வரப்பட்டு விற்பனை...

இ- ஆபிஸ் பணிகளை சிறப்பாக செயல்படுத்திய போலீஸ் கமிஷனருக்கு டிஜிபி பாராட்டு!!!!

0
நெல்லை மாநகரம் - மே-18,2022 தமிழக காவல் துறையில் மாநகர அளவில் e Office முறையை சிறப்பாக செயல்படுத்தியமைக்காக பாராட்டு சான்றிதழை பெற்றுக்கொண்ட நெல்லை மாநகர காவல் ஆணையாளர் .தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர்...

தற்போதைய செய்திகள்