80.7 F
Tirunelveli
Saturday, July 2, 2022
முகப்பு மாவட்டம் திருச்சி மழைகாலம் என்‌‌‌பதால் பொதுமக்கள் நலன் கருதி பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் ...

மழைகாலம் என்‌‌‌பதால் பொதுமக்கள் நலன் கருதி பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் மத்திய மண்டல ஐ.ஜி தகவல்

திருச்சி – அக் -07,2021

செய்தியாளர் – எஸ்.எம்.பாரூக்

திருச்சி மத்திய மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக ஏரி, குளம், குட்டை, கிணறு மற்றும் ஆறுகளில் தண்ணீர் அதிகமாக தேங்கி உள்ளதால் குளிக்க, விளையாட செல்லும் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் நீரின் ஆழத்தை அறியாமல் மூழ்கி இறக்கும் நிலை ஏற்படுகிறது இதை தடுக்கும் பொருட்டு மத்திய மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நீர் அதிகம் தேங்கி இருக்கும் மற்றும் ஏற்கெனவே நீர்ல் மூழ்கி உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ள ஆபத்தான நீர்நிலை பகுதிகள் மொத்தம் 268 பகுதிகள் என கண்டறியப்பட்டுள்ளது.
ஆபத்தான பகுதி என்று கண்டறியப்பட்டுள்ள 268 இடங்களில் பொதுப்பணித்துறை, வருவாய் மற்றும் காவல்துறை மூலம் 110 இடங்களில் எச்சரிக்கைப் பலகை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது மற்ற இடங்களிலும் உடனடியாக எச்சரிக்கை பலகை வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது மேலும் அந்தந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தன்னார்வலர்களை காவலர்களுடன் இணைந்து பகல் மற்றும் இரவு ரோந்து அனுப்பியும் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்குபவர்களை காப்பாற்ற நீச்சல் பயிற்சி பெற்ற தன்னார்வலர்களை ஆபத்தான பகுதியில் நிறுத்தியும் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை செய்தும் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தியும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் ஒவ்வொரு மாவட்ட தலைமையகத்திலும் ஒரு உதவி ஆய்வாளர் தலைமையில் 10 பேர் கொண்ட பேரிடர் மீட்பு பயிற்சி பெற்ற காவல் படையினர் அவசர நிகழ்வுகளை எதிர்கொள்ள தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் தெரிவித்‌‌‌துள்‌‌‌ளார்‌‌‌

19,724FansLike
89FollowersFollow
387SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தமிழக காவல்துறைக்கு பெருமை தேடி தந்த காவலருக்கு மாவட்ட எஸ்பி பாராட்டு

0
தூத்துக்குடி - ஜீலை -01,2022 திருச்செந்தூரில் நள்ளிரவில் மருந்து கிடைக்காமல் பரிதவித்த ஓய்வு பெற்ற இலங்கை அறுவை சிகிச்சை மருத்துவரை யாரென்றே தெரியாமல், அவருக்கு அவசரத்தேவையான மருந்துகளை வாங்கிக்கொடுத்து உதவிய திருச்செந்தூர் காவலரையும், தமிழக...

மரம் நடுதல் அதன் நன்மைகள் குறித்து விளக்க குழு உருவாக்கம் ஆவடி போலீஸ் கமிஷனர்...

0
சென்னை ஆவடி -ஜீலை -01,2022 செய்தியாளர் - கே.நியாஸ் இன்று ஆவடி காவல் ஆணையரகத்தில் மரம்நடுதல் அதன் நன்மைகள், குறித்து குழு உருவாக்கும் பயிற்சி "எஸ்பிரிட் டி கார்ப்ஸ்" மற்றும் ஆவடி காவல் ஆணையரகம்"...

திருட்டு மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுப்பட்ட நபர் குண்டாஸில் கைது

0
நெல்லை மாநகரம் - ஜீலை -01,2022 திருநெல்வேலி மாவட்டம் மற்றும் திருநெல்வேலி மாநகர பகுதிகளில் திருட்டு வழக்கு மற்றும் பொது ஒழுங்கிற்கு பங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த வந்த நபர் குண்டர் தடுப்பு...

மெச்சதகுந்த பணிக்காக போலீசாருக்கு எஸ்பி பாராட்டு!!!

0
திருநெல்வேலி - ஜீலை -01,2022 மதுபானம் விற்பனை செய்தவர்களை கைது செய்ய உதவியாக இருந்து சிறப்பாக பணிபுரிந்த மாவட்ட ஆயுதப்படை காவலர்களுக்கு பாராட்டு. திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் இ.கா.ப சட்டவிரோதமாக கஞ்சா,...

திருவாரூர் மாவட்டத்தில் களவு போன மற்றும் காணமல் போன 5,லட்சம் மதிப்புள்ள ஆன்ராய்டு செல்போன்‌‌‌கள்...

0
திருவாரூர் - ஜீன் -30,2022 களவு போன மற்றும் காணாமல் போன ரூ.5.10.000/- மதிப்பிணன 75 ஆன்ராய்டு வகை செல் போன்கள் மீட்பு - உரிமையாணிகளிப ஒப்படைத்து மாவட்ட காவல் கண்காணிப்பார் அதிரடி நடவடிக்கை திருவாரூர்...

தற்போதைய செய்திகள்