சென்னை – அக் – 31,2021
தேவர் ஜெயந்தி அன்று பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும்,
கடந்த ஒருவார காலமாக தேவர் ஜெயந்தி விழா நடைபெற்ற மாவட்டங்களில் (குறிப்பாக – பசும்பொன், கோரிப்பாளையம், நந்தனம்) எந்தவித அசம்பாவிதங்களும் நடந்துவிட கூடாது என்பதற்காக,
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களை கிண்டல் செய்தல், தகாத வார்த்தைகளால் பேசுதல், அரசு பேருந்து மற்றும் காவல்துறை வாகனங்களின் மீது ஏறி ஆடுதல், சேதப்படுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபட்டவர்களையும்,
வீடியோ காட்சி பதிவுகளை அடிப்படையாக கொண்டு கடுமையான நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும்.
அப்போதுதான் இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட யோசிப்பார்கள் என,
அனைத்து மாவட்ட காவல்துறைக்கும் தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்…