81.9 F
Tirunelveli
Tuesday, June 28, 2022
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி ஆயுதபடை காவலர்கள் குடியிருப்பில் மாவட்ட எஸ்‌.பி தலைமையில் கொரனா தடுப்பூசி சிறப்‌‌‌பு முகாம் நடைபெற்றது

ஆயுதபடை காவலர்கள் குடியிருப்பில் மாவட்ட எஸ்‌.பி தலைமையில் கொரனா தடுப்பூசி சிறப்‌‌‌பு முகாம் நடைபெற்றது

தூத்துக்குடி – அக் – 23,2021

தூத்துக்குடி 3வது மைல் ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் இன்று ஆயுதப்படை காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தார்களுக்கான கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் மற்றும் காவலர்களுக்கான மனஅழுத்த மேலாண்மை குறித்த பயிற்சி வகுப்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.

தமிழக அரசு கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளவும், நம்மிடமிருந்து மற்றவர்களுக்கு பரவாமலிருக்கவும், அனைத்து மக்களும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. அதன்படி இன்று (23.10.2021) தூத்துக்குடி 3வது மைல் ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் காவல்துறையினர் மற்றும் அவரது குடும்பதார்களுக்கு கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து இம்முகாமில் கலந்து கொண்ட ஆயுதப்படை காவலர்களுக்கு மன அழுத்தத்தை குறைப்பதற்கான பயிற்சி குறித்து சமூக ஆர்வலர் அழகர் செந்தில் கலந்துகொண்டு காவலர்களுக்கு பயிற்சி அளித்தார்.

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பேசுகையில், கொரோனா பெருந்தொற்று பரவலை தடுப்பதற்கு மாற்று வழி தடுப்பூசிதான். இந்த தடுப்பூசி தான் நம்மை பாதுகாக்கும் கவசம். 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போடவேண்டும் என்பது அரசின் நோக்கம், தடுப்பூசி போட்டவர்களுக்கு அவ்வளவு சீக்கிரமாக கொரோனா தொற்று வருவதில்லை, அப்படியே தடுப்பூசி போட்டவர்களுக்கு வந்தால் கூட உயிரிழப்பு ஏற்படுவதில்லை. தூத்துக்குடி மாவட்டத்தில் தடுப்பூசி போடாத அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும், அனைவரும் முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடித்து கொரோனா பெருந்தொற்றிலிருந்து நம்மை நாமே காப்பாற்றி கொள்ள வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

மேலும் காவல்துறையினரின் பல்வேறு பணிகளின் காரணமாகவும், பண்டிகை நாட்களில் கூட காவல்துறையினர் குடும்பத்தினருடன் இருக்க முடியாத சூழலில் பணியாற்றி வருவதாலும், நாம் பண்டிகை காலங்களில் கூட குடும்பத்துடன் இருக்க முடியவில்லையே என்று எண்ணி கூட மனஅழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே காவலர்கள் இந்த மனஅழுத்த பயிற்சி முகாமை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுகொண்டு தனது உரையை நிறைவு செய்தார்.

இந்த சிறப்பு முகாமின் போது தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பளார் இளங்கோவன், தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை காவல் ஆய்வாளர் சுடலைமுத்து, உதவி ஆய்வாளர்கள்; மணிகன்டன், செல்வராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் உடனிருந்தனர்.

19,724FansLike
89FollowersFollow
387SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லையில் தொடர் திருட்டில் ஈடுபட்ட இரண்டு்‌‌‌ பேர் சிக்கினர்‌‌‌ தனிப்‌‌‌படை போலீசாருக்கு துணை...

0
நெல்லை மாநகரம் - ஜீன் -27,2022 நெல்லை மாநகரம் பெருமாள்புரம் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட செயிண்ட் தாமஸ் நகர், கற்பகவிநாயகர் நகர், கார்த்திகேயன் நகர், ஜெயராஜ் அன்னபாக்கியம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நம்பிநகர், மகிழ்ச்சி நகர்...

நெல்லையில்‌‌‌ திருமண இணையதளத்தில் பண மோசடி அதிரடியாக பணத்தை மீட்ட சைபர் க்‌‌‌ரைம்...

0
திருநெல்வேலி - 27,2022 தமிழக முதல்வர் அறிவுரையின் படி மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் மனு அளித்த நபருக்கு இணையவழி மூலமாக ஏமாற்றப்பட்ட ரூ.1 இலட்சத்து 24...

நெல்லையில் கீழே கிடந்த பணப்பையை நேர்மையுடன் காவல்நிலையத்தில் ஒப்படைத்த இளைஞருக்கு துணை கமிஷனர்...

0
நெல்லை மாநகரம் - ஜீன் -27,2022 நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் கிடந்த பணப்பையை நேர்மையுடன் காவல் நிலையத்தில் ஒப்படைத்த அரசு போக்குவரத்து கழக நடத்துனரை பாராட்டி கௌரவித்த நெல்லை மாநகர கிழக்கு காவல்...

நெல்லையில் இன்று சாலை விபத்து ஏற்பட்ட பகுதியில் துணை கமிஷனர் நேரில்...

0
நெல்லை மாநகரம் - ஜீன் -25,2022 நெல்லை மாநகரம் ராஜகோபாலநகர் பகுதியில் நான்கு வழி சாலையில் இன்று சாலை விபத்து ஏற்பட்ட சம்பவ இடத்தைநெல்லை மாநகர கிழக்கு காவல் துணை ஆணையாளர் V.R.ஸ்ரீனிவாசன் ...

சர்வதேச போதை பொருள்‌ ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மணற்சிற்ப கண்காட்சியை போலீஸ்‌‌‌ கமிஷனர்‌‌‌ துவக்கிவைத்தார்

0
சென்னை -ஜீன் -25,2022 சென்னை பெருநகர காவல் ஆணையாளர். சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, மெரினா கடற்கரையில், பள்ளி மாணவர், மாணவியருடன் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் மணற்சிற்ப கண்காட்சியை...

தற்போதைய செய்திகள்