தேனி – அக்-06,2021
செய்தியாளர் – செல்வக்குமார்
பெரியகுளம் துணைக் கண்காணிப்பாளர் முத்துக்குமார் தலைமையில் பெரியகுளத்தை சுற்றி உள்ள அனைத்து ஊர் சமுதாய தலைவர்களையும் அழைத்து தீவிர ஆலோசனை
தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகா உட்பட்ட அனைத்து சமுதாயத் தலைவர்களை அழைத்து அவர்களுடன் பெரியகுளம் துணை கண்கானிப்பாளர் முத்துக்குமார் ஆலோசனை மேற்கொண்டார்… தற்போது தமிழக முதல்வர் அறிவித்துள்ள கொரோனா ஊரடங்கு உத்தரவை யாரும் மீற வேண்டாம் தற்சமயத்தில் கொரோனா காலகட்டத்தில் திருவிழாக்கள் நடத்த தடைவிதித்து அறிவுரை குறித்து காவல் துறை சார்பாக கூட்டமைப்பு அறிவுறுத்தப்பட்டது. இருப்பினும் சில கிராமங்களில் அரசு விதிமுறைகளை மீறிதிருவிழா நடத்துவதற்கு உரிய முன்னேற்பாடுகளை முளைப்பாரி,தீச்சட்டி,மாவிலக்கு மற்றும் கரகம் எடுக்கும் நிகழ்ச்சி நடத்தப் போவதாக ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளது. இது மிகவும் வருந்தத்தக்கது. திருவிழா போன்ற பொது நிகழ்வுகள் நடத்த வேண்டாம் என்றும் ஊரில் கலவரம் ஏற்படும் நிலை வந்தாலும் கலவரம் நடக்க தூண்டிவிடும் சில சமூக விரோதிகளையும் எங்களுக்கு உடனடியாக தெரியப்படுத்த வேண்டும். இளைஞர்கள் கஞ்சா மற்றும் குடிபோதைக்கு அடிமையாகி கிராம அமைதியைக் கெடுப்பவர்களை காவல்துறை கவனத்திற்கு கொண்டு வர வேண்டும் அவர்களுக்கு கிராமம் ஆதரவு கொடுக்க கூடாது. தனி நபர் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு பேனர் ஒலிபெருக்கி அமைப்பது காவல்துறை அனுமதி பெற வேண்டும். பின்பு மீறுபவர்கள் மீது நாங்கள் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊர் தலைவர்களிடம் வாக்குறுதி அளித்தார்..