85.9 F
Tirunelveli
Monday, November 28, 2022
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு மாவட்ட எஸ்‌பி தலைமையில் ஆலோசனை

தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு மாவட்ட எஸ்‌பி தலைமையில் ஆலோசனை

தூத்துக்குடி – அக் – 28,2021

114வது தேவர் ஜெயந்தி மற்றும் குரு பூஜை விழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக வளாகத்தில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் காவல்துறையினர் எந்தெந்த இடங்களில் பாதுகாப்பு அலுவலுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர், அவர்கள் என்னென்ன பணிகளை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல அறிவுரைகள் வழங்கப்பட்டது.

இராமநாதபுரம் மாவட்டத்தில் வருகின்ற 30.10.2021 அன்று நடைபெற உள்ள தேவர் ஜெயந்தி மற்றும் குரு பூஜை விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . எஸ். ஜெயக்குமார் தலைமையில் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் கோபி, 10 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 40 காவல் ஆய்வாளர்கள், 114 உதவி ஆய்வாளர்கள் உட்பட 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட எல்லையோரங்களில் 12 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர வாகன தணிக்கை நடைபெற்று வருகிறது. அதே போன்று அனைத்து உட்கோட்ட எல்லைகளிலும் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு வாகன தணிக்கை நடைபெற்று வருகிறது. இது தவிர ‘டெல்டா’ என்னும் 6 அதிரடிப்படையினர் மற்றும் ‘ஆல்பா’ என்னும் அதிரடிப்படையினர் அடங்கிய காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிலைகளுக்கு போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது, 205 முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணிக்கு தனியாக (Picketting) நியமிக்கப்பட்டுள்ளனர். நெடுஞ்சாலை ரோந்து மற்றும் அந்தந்த காவல் நிலைய நான்கு சக்கர வாகன ரோந்து மற்றும் இரு சக்கர வாகன ரோந்துகள் தவிர கூடுதலாக 26 நான்கு சக்கர வாகன சாலை ரோந்தும், 9 இரு சக்கர வாகன சாலை ரோந்து பணியும் நியமிக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் தூத்துக்குடி காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கோபி, திருச்செந்தூர் உதவி காவல் கண்காணிப்பாளர்கள் ஹர்ஷ் சிங் இ.கா.ப, தூத்துக்குடி ஊரகம் சந்தீஸ் இ.கா.ப, காவல் துணை கண்காணிப்பாளர்கள் ஸ்ரீவைகுண்டம் வெங்கடேசன், மணியாச்சி சங்கர், கோவில்பட்டி உதயசுசூரியன், நில மோசடி தடுப்பு சிறப்பு பிரிவு சம்பத், சாத்தான்குளம் கண்ணன், விளாத்திக்குளம் பிரகாஷ், மதுவிலக்கு அமலாக்க பிரிவு பாலாஜி, மாவட்ட குற்ற ஆவண காப்பகம் திரு. பிரேமானந்தன், பயிற்சி காவல் துணை கண்காணிப்பாளர்கள் கணேஷ் குமார், செல்வி. ஷாமளா, பவித்ரா மற்றும் மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.

19,724FansLike
125FollowersFollow
394SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் முக்கிய பிரிவுகளின் கோப்புகள்‌‌‌ எஸ்பி முன்னிலையில் டிஐஜி ஆய்வு

0
தூத்துக்குடி - நவ -28,2022 Newz - webteam தூத்துக்குடி மாவட்டத்தில் திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பிரவேஷ் குமார் இ.கா.ப அவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல் பாலாஜி...

நெல்லையில் நடைபெறும்‌‌‌ இரண்டாம் நிலை காவலர் எழுத்து தேர்வு நடைபெறும் மையங்களில்...

0
திருநெல்வேலி - நவ -27,2022 Newz - webteam தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலைக் காவலருக்கான எழுத்து தேர்வு இன்று நடைபெற்று வருகிறது. திருநெல்வேலி சரக...

தூத்துக்குடியில் இரண்‌‌‌டாம்‌‌‌ நிலை காவலர் தேர்வு நடைபெறும் மையங்களில் தேர்வு கண்காணிப்பு அதிகாரி டிஐஜி...

0
தூத்துக்குடி - நவ -27,202 Newz - webteam தூத்துக்குடியில் 2022ம் ஆண்டிற்கான காவலர் எழுத்து தேர்வு நடைபெற்று வரும் நிலையில் தேர்வு எழுதும் மையங்களுக்கு தேர்வு கண்காணிப்பு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள...

நெல்லையில் அபகரிக்‌‌‌கபட்ட 90,செண்ட் நிலம் மீட்பு மாவட்ட எஸ்பி உரியவரிடம் வழங்கினார்

0
திருநெல்வேலி - நவ -26,2022 Newz - webteam 90 செண்ட் நிலத்தை மீட்க காரணமாக இருந்த நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல்துறையினர். திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளையை சேர்ந்த சரோஜா என்பவருக்கு சொந்தமான...

நாளை நடைபெறும் இரண்டாம் நிலை காவலர் தேர்வின் விதிமுறைகள் குறித்து மாவட்ட எஸ்பி அறிக்கை...

0
தூத்துக்குடி - நவ -26,2022 Newz - webteam நாளை நடைபெறவுள்ள காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலைக் காவலருக்கான எழுத்து தேர்வில் கலந்து கொள்ளும் தூத்துக்குடியில் தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்களுக்கு மாவட்ட...

தற்போதைய செய்திகள்