93.1 F
Tirunelveli
Tuesday, May 24, 2022
முகப்பு மாவட்டம் திருச்சி விமானநிலைய பாதுகாப்பு குறித்து போலீஸ் கமிஷனர் தலைமையில் விமான படை அதிகாரிகளுடன் ஆலோசனை

விமானநிலைய பாதுகாப்பு குறித்து போலீஸ் கமிஷனர் தலைமையில் விமான படை அதிகாரிகளுடன் ஆலோசனை

திருச்சி – அக் – 05,2021

செய்தியாளர் – எஸ்.எம்.பாரூக்

திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலைய குழு உறுப்பினர்கள் கூட்டம் 04.10.2021 அன்று காலை 1100 மணிக்கு விமானநிலைய குழுவின் தலைவர் மற்றும் திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், இ.கா.ப., தலைமையில் விமான நிலைய இயக்குனர் தர்மராஜ்‌‌‌ முன்னிலையில்‌‌‌ நடத்தப்பட்டது.
இந்த குழுவில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், விமானநிலைய பாதுகாப்பு குழு, பாதுகாப்பு பிரிவு, இந்திய விமானப்படை, தேசிய பாதுகாப்பு குழு, குடியேற்ற பணியகம், சுங்கத்துறையினர், உளவுத்துறை பணியகம், சிறப்பு பணியகம், திருச்சி, மக்கள் தொடர்புத்துறை மற்றும் சம்பந்தப்பட்ட விமான நிறுவன அதிகாரிகள், விமானநிலைய அதிகாரிகளை உறுப்பினர்களாக கொண்டு இக்கூட்டம் நடத்தப்பட்டது. பாதுகாப்பு கருதி அடிப்படை தேவைகள் மற்றும் தொழிநுட்ப விபரக்குறிப்பு, தீவிரவாத தடுப்பு நடவடிக்கை ஒத்திகை, விமானநிலையத்திலிருந்து 3 கி.மீ. தூரம் ட்ரோன் பறப்பதற்கு தடைசெய்யப்பட்ட பகுதி என்பது பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும், ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட விபத்துக்கள் போன்று எவ்வித விபத்துக்கள் ஏற்படா வண்ணம் ட்ரோன் கண்காணிப்பு தொழில்நுட்பத்தை தக்க உபகரணங்களுடன் எதிர்கொள்வது பற்றியும், தேசிய நெடுஞ்சாலை 210 விமான ஒடுதளத்தில் அருகாமையில் இருப்பதால், பாதுகாப்பு கருதி தரைவழிப்பாலம் அல்லது சாலையின் உயரத்தை குறைப்பது பற்றியும்,
விமான கடத்தல் ஒத்திகையின்போது தேசிய பாதுகாப்பு குழுவினருக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்து அவர்களையும் வைத்து ஒத்திகை செய்வது என்றும்,கடந்த கூட்டத்தில் CCTV அதிகமாக வெளிப்பகுதிகளில் அமைத்தால் கடத்தல் செய்பவருக்கும், கடத்தலுக்கு உடந்தையாக இருப்பவரையும் எளிதில் கண்காணித்து கடத்தலை தடுக்க முடியும் என்று வெளியே வாகன நிறுத்துமிடங்களில் 16 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும்,
உதவி ஆணையர், பொன்மலை சரகம் அவர்கள் விமானநிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணிகளை தீவிரப்படுத்துவது குறித்தும்,வெளியே குடியிருப்பு பகுதிகளில் வெளியாட்கள் எவரேனும் தங்கியுள்ளார்களா என்று சோதனை செய்தும், டிரோன் சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்துவது பற்றியும்,
விமானநிலையத்தின் நுழைவாயில் மற்றும் வெளியே செல்லும் பகுதியில் காவலர் சாவடி அமைப்பது பற்றியும் விமானநிலைய குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து ஆலோசிக்கப்பட்டது.

19,724FansLike
84FollowersFollow
388SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லை மார்கெட்டில் முன்விரோத கொலையில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது

0
நெல்லை மாநகரம் - மே-23,2022 நெல்லை மாநகரம் தச்சநல்லூர் மார்க்கெட்டில் முன்விரோதம் காரணமாக கொலையில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது. திருநெல்வேலி மாவட்டம் மானூர் சுப்பையாபுரம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த...

“குவாரியில் சிக்கியிருந்த 4,நபர்களின்‌‌‌ உடல்கள் 8,நாட்களுக்கு பிறகு காவல்துறை, தீயனைப்புதுறை மற்‌‌‌றும்‌‌‌...

0
திருநெல்வேலி - மே -23,2022 திருநெல்வேலி குவாரி விபத்தில் சிக்கியிருந்த 6 நபர்களில் 2 நபர்களை உயிருடனும் 4 நபர்களின் உடலை 8 நாட்கள் தொடர் மீட்புபணிக்கு பின் மீட்ட காவல்துறையினர், தீயணைப்பு துறையினர்...

மூத்தோர் தடகள போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு எஸ்பி பாராட்டு

0
விழுப்புரம் - மே- 23,2022 அகில இந்திய அளவிலான மூத்தோர் தடகளப் போட்டியில் பதக்கம் வென்ற விழுப்புரம் மாவட்ட விளையாட்டு வீரர்கள் காவல் கண்காணிப்பாளர் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். கடந்த 20,21,22 ஆகிய...

இறகுபந்து போட்டியில்‌‌‌ தங்க பதக்கம் வென்ற காவல் ஆய்வாளருக்கு போலீஸ் கமிஷனர் பாராட்டு!!!!

0
மதுரை - மே-23,2022 திருவனந்தபுரத்தில் நடந்து வரும் 4வது தேசிய மூத்தோர் விளையாட்டு போட்டி 18.05.2022 துவங்கி 22.05.2022 அன்று நிறைவு பெற்றது. இதில் வயது வாரியான போட்டிகளில் அனைத்து மாநிலங்களிலும் பங்கேற்றனர். இப்போட்டியில்...

ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில்‌‌‌ உயிழந்தவர்களின் நினைவு நாளை முன்னிட்டு 2500 போலீசார்‌‌‌...

0
தூத்துக்குடி - மே -20,2022 தூத்துக்குடி தனியார் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின்போது உயிரிழந்தவர்களின் 4ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் திருநெல்வேலி...

தற்போதைய செய்திகள்