86 F
Tirunelveli
Friday, May 20, 2022
முகப்பு மாவட்டம் திருச்சி திருச்சி - போலீஸ் கமிஷனர் பெட்ரோல் பங்க்,நூலகம்,மோப்பநாய் பிரிவு போன்றவைகளில் ஆய்வு

திருச்சி – போலீஸ் கமிஷனர் பெட்ரோல் பங்க்,நூலகம்,மோப்பநாய் பிரிவு போன்றவைகளில் ஆய்வு

திருச்சி – அக் -12,2021

செய்தியாளர் – எஸ்.எம்.பாரூக்

திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன். இ.கா.ப., இன்று காலை திருச்சி மாநகரம், கே.கே.நகரில் உள்ள காவலர் மருத்துவமனை, பெட்ரோல் பங்க், மோப்‌‌‌பநாய்‌‌‌ பிரிவு நூலகம் ஆகியவற்றை ஆய்வு செய்து அறிவுரைகள் வழங்கினார்.

மாநகர ஆயுதப்படை வளாகத்தில் உள்ள செடிகொடிகளை அகற்றி சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்னும், மோப்‌‌‌பநாய்‌‌‌ பிரிவில் வழக்கு விசாரணைக்கு உதவும் வகையில் நாய்களை சிறப்பாக தயார் செய்து வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்

பெட்ரோல் பங்கில் எரிபொருள் நிரப்பும் காவல் வாகனங்கள் குறித்த பதிவேட்டினை முறையாக பராமரிக்க வேண்டும் என்றும், பெட்ரோல் பங்கின் உரிமத்தினை உரிய காலத்தில் புதுப்பித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், தீப்பற்றாத வண்ணம் எல்லாவிதமான முன்னேற்பாடுகளை செய்து வைத்திருக்க வேண்டும் என்றும், உரிய தீ தடுப்பு உபகரணங்கள் ஏற்பாடு செய்து வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்

திருச்சி மாநகர ஆயுதப்படையில் இயங்கி வரும் காவலர் மருத்துவமனையில் இ.சி.ஜி

உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை காவலர்களின் நலன் கருதி ஏற்பாடு செய்து வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்

மாநகர ஆயுதப்படை வளாகத்தில் உள்ள நூலகத்தை ஆய்வு செய்தபோது, அனைவரிடமும் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும், சந்தாதாரர்களை அதிகப்படுத்த வேண்டும் என்று கூறி திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள், தானும் ஒரு சந்தாதாரராக பதிவு செய்து கொண்டு நூலகத்தை நல்ல முறையில் வைத்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்

19,724FansLike
84FollowersFollow
388SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில்‌‌‌ எஸ்பி தலைமையில் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு

0
தூத்துக்குடி -மே -20,2022 ‘கொடுஞ்செயல் எதிர்ப்பு” நாளை முன்னிட்டு இன்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் உறுதிமொழி. ஒவ்வொரு ஆண்டும் மே...

நெல்லையில் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி போலீஸ் கமிஷனர் தலைமையில்...

0
நெல்லை மாநகரம் -மே - 20,2022 நெல்லை மாநகர காவல் ஆணையாளர் .சந்தோஷ் குமார் இ.கா.ப தலைமையில் காவல் அதிகாரிகள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள்...

விழுப்புரத்தில் காவல் உதவி செயலி விழிப்புணர்வு ஸ்‌‌‌டிக்‌‌‌கர்‌‌‌ ஒட்‌‌‌டும்‌‌‌ நிகழ்ச்சியில் அமைச்சர்,ஆட்சியர், மாவட்ட...

0
விழுப்புரம் -மே - 19,2022 தமிழக காவல்துறை சார்பில் பெண்கள் மற்றும் குழுந்தைகள், பொதுமக்கள் பாதுகாப்பிற்காகக் காவல்துறையை உடனடியாக தொடர்புக்கொள்ள தங்கள் கைபேசியில் "KAVAL UTHAVI APP": (செயலியை) பயன்படுத்திக் கொள்ளலாம் எனக் காவல்துறை...

தஞ்சாவூரில் 40,லட்சம் மதிப்புள்ள சுமார் 2000 கிலோ குட்கா பறிமுதல் 2,பேர் கைது தனிப்படை...

0
தஞ்சாவூர் - மே - 18,2022 செய்தியாளர் - சோமாஸ் கந்தன் தஞ்சாவூர் சரக டெல்டா மாவட்டங்களில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களை வெளி மாநிலங்களிலிருந்து கடத்தி வரப்பட்டு விற்பனை...

இ- ஆபிஸ் பணிகளை சிறப்பாக செயல்படுத்திய போலீஸ் கமிஷனருக்கு டிஜிபி பாராட்டு!!!!

0
நெல்லை மாநகரம் - மே-18,2022 தமிழக காவல் துறையில் மாநகர அளவில் e Office முறையை சிறப்பாக செயல்படுத்தியமைக்காக பாராட்டு சான்றிதழை பெற்றுக்கொண்ட நெல்லை மாநகர காவல் ஆணையாளர் .தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர்...

தற்போதைய செய்திகள்