சென்னை – அக் -26,2021
கொளத்தூர் பகுதியில் இரவு ரோந்து பணியின்போது, வங்கி ATM மையத்திலுள்ள ATM இயந்திரத்தை உடைத்து திருட முயன்ற மகேஷ் என்பவரை, 1 மணி நேரத்தில் கைது செய்த, வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் குழுவினரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.
வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் உமா மகேஸ்வரி 19.10.2021 அன்று இரவு கொளத்தூர், ஶ்ரீநகர் காலனி மற்றும் மேற்கு தெரு சந்திப்பில் ரோந்து பணியிலிருந்தபோது, சற்று தொலைவில் உள்ள கனரா வங்கியின் ATM மையத்திலிருந்து ஒரு நபர் தப்பியோடினார். உடனே, ஆய்வாளர் ATM மையத்திற்குள் சென்று பார்த்தபோது, தப்பியோடிய நபர் ATM இயந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயற்சித்தபோது, காவல் வாகனம் வருவதை கண்டு அந்த நபர் தப்பியோடியது தெரியவந்தது.
உடனே, காவல் கட்டுப்பாட்டறைக்கு தகவல் கொடுத்ததின்பேரில், இரவு ரோந்து பணியிலிருந்த உதவி ஆய்வாளர் வாசு, முதல்நிலைக் காவலர்கள் ராஜா A.கலீல் பாஷா , காவலர் கிருஷ்ணகுமார் (53215) மற்றும் ஊர்க்காவல் படை வீரர் P.ஆளமுத்து(HG 1780) ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். காவல் ஆய்வாளர் தலைமையில் மேற்படி காவல் குழுவினர், சுமார் 1 மணி நேரத்தில், மேற்படி ATM இயந்திரத்தை உடைத்து திருட முயன்ற குற்றவாளி மகேஷ் (வ/21) தூத்துக்குடி என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 3 அடி நீளமுள்ள கடப்பாரை கைப்பற்றப்பட்டது. மேற்படி எதிரி மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இரவு ரோந்து பணியின்போது, சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளியை கைது செய்த, வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் குழுவினரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.