சென்னை – அக் – 20,2021
கொடுங்கையூர் பகுதியில் வாகன சோதனையின் போது முறையான ஆவணங்கள் இல்லாமல் காரில் எடுத்து வந்த ரூ.1,54,50,000/- மற்றும் கார் ஆகியவற்றை கைப்பற்றிய, கொடுங்கையூர் போக்குவரத்து காவல் நிலைய காவல் குழுவினரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.
கொடுங்கையூர் போக்குவரத்து காவல் நிலைய உதவி ஆய்வாளர் வெற்றிவேந்தன் மற்றும் தலைமைக்காவலர் கணபதி (த.கா.28115) ஆகிய இருவரும் கடந்த 13.10.2021 அன்று இரவு கொடுங்கையூர் GNT ரோட்டில் வாகன தணிக்கை பணியில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியே வேகமாக வந்த காரை நிறுத்தி விசாரணை செய்து, காரை சோதனை செய்தபோது, காரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரொக்கம் ரூ.1,54,50,000/- கடத்தி வந்தது தெரியவந்தது.
அதன்பேரில் காவல் குழுவினர், 1) ஷேக்பயாஸ் ஆந்திரமாநிலம், மற்றும் 2) கோபால் ராம் ராஜஸ்தான் ஆகிய இருவரையும் பணம் மற்றும் காருடன் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இரவு பணியில் விழிப்புடன் செயல்பட்ட கொடுங்கையூர் போக்குவரத்து காவல் நிலைய உதவி ஆய்வாளர் வெற்றிவேந்தன் மற்றும் தலைமைக்காவலர் கணபதி ஆகியோரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.