சென்னை – அக் -20,2021
பல்லாவரம் பகுதியில் காலிமனையை வைத்து கடன் பெற்று 1.6 கோடி மோசடி செய்த 2 நபர்களை கைது செய்த, மத்திய குற்றப்பிரிவு காவல் குழுவினரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.
சென்னை, பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த பிரபாவதி (வ/45) என்பவரிடம், அவருக்கு சொந்தமாக பல்லாவரம் பகுதியில் உள்ள 465 சதுர அடி நிலத்தின் மீது, கடன் பெற்றுத் தருவதாக 2 நபர்கள் ஆசை வார்த்தை கூறி, நம்பிக்கை மோசடி செய்து ரூ.1.6 கோடி கடன் பெற்று மோசடி செய்து ஏமாற்றியதாகவும், மேற்படி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படியாகவும் பிரபாவதி கொடுத்த புகாரின் பேரில் சென்னை மத்தியகுற்றப்பிரிவு வழக்கு பதிவு செய்து விசாரண மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வாளர் பாரதி உதவி ஆய்வாளர் கோகுலகிருஷ்ணன், தலைமைக்காவலர் செந்தில்குமார் (26677) ஆகியோர் அடங்கிய காவல் குழுவினர் விசாரணை செய்து மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட 1) விநாயாக ஆச்சர்யா (வ/45) மடிப்பாக்கம், 2) ஜகுபர் அலி (வ/37) எம்.கே.பி நகர் ஆகிய இருவரை கைது செய்தனர். மேற்படி எதிரிகள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மேற்படி வழக்கில் சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த, மத்திய குற்றப்பிரிவு, காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.