81.9 F
Tirunelveli
Tuesday, June 28, 2022
முகப்பு மாவட்டம் சென்னை சென்னையின் முக்கிய வர்த்தக பகுதிகளில் பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் மற்றும் மாநகராட்சி கமிஷனர் கொரனா விழிப்புணர்வு

சென்னையின் முக்கிய வர்த்தக பகுதிகளில் பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் மற்றும் மாநகராட்சி கமிஷனர் கொரனா விழிப்புணர்வு

சென்னை – அக் – 23,2021

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் இணைந்து புரசைவாக்கம், தி.நகர் மற்றும் பெசன்ட்நகர் பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து, கொரோனா தொற்று பரவாமல் தடுப்பது குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைத்து முகக்கவசம் அணிய வலியுறுத்தினர்.

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்காக தமிழக அரசு, முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல், திரவ சுத்திகரிப்பான் பயன்படுத்துதல் மற்றும் தடுப்பூசி செலுத்தி கொள்ளுதல் ஆகிய கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடிக்க அறிவுறுத்தியுள்ளது. மேலும், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், தமிழக அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடிக்க சென்னை பெருநகர காவல்துறை சார்பில் பல்வேறு கண்காணிப்பு பணிகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் திரு.ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., ஆகியோர் இன்று மாலை புரசைவாக்கம் பகுதிக்கு சென்று கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை பொதுமக்கள் கடைபிடிக்கின்றனரா என ஆய்வு செய்தனர். அங்குள்ள பல கடைகளின் உரிமையாளர்களிடமும், பொதுமக்களிடமும் முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து எடுத்துரைத்து, முகக்கவசங்களை வழங்கினர். மனித உயிர்களை காப்பாற்ற தமிழக அரசு மேற்கொண்டுள்ள கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளான முகக்கவசம் அணிதலையும், சமூக இடைவெளி கடைபிடித்தலையும், திரவ சுத்திகரிப்பான் கொண்டு அடிக்கடி கைகளை சுத்தம் செய்தலையும், கட்டாயம் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் எனவும், மருத்துவர்களின் பரிந்துரைப்படி கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளவும் வலியுறுத்தினர்.

பின்னர் பாண்டிபஜார் மற்றும் பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரை பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்து, கொரோனா தடுக்கும் வழிமுறைகள் குறித்து எடுத்துரைத்து, முகக்கவசம் கட்டாயம் அணிய வலியுறுத்தினர்.

இந்நிகழ்ச்சியில், கூடுதல் காவல் ஆணையாளர் (தெற்கு) மருத்துவர் கண்ணன், இ.கா.ப., தெற்கு மண்டல இணை ஆணையாளர் நரேந்திர நாயர், இ.கா.ப., துணை ஆணையாளர்கள், காவல் அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

19,724FansLike
89FollowersFollow
387SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லையில் தொடர் திருட்டில் ஈடுபட்ட இரண்டு்‌‌‌ பேர் சிக்கினர்‌‌‌ தனிப்‌‌‌படை போலீசாருக்கு துணை...

0
நெல்லை மாநகரம் - ஜீன் -27,2022 நெல்லை மாநகரம் பெருமாள்புரம் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட செயிண்ட் தாமஸ் நகர், கற்பகவிநாயகர் நகர், கார்த்திகேயன் நகர், ஜெயராஜ் அன்னபாக்கியம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நம்பிநகர், மகிழ்ச்சி நகர்...

நெல்லையில்‌‌‌ திருமண இணையதளத்தில் பண மோசடி அதிரடியாக பணத்தை மீட்ட சைபர் க்‌‌‌ரைம்...

0
திருநெல்வேலி - 27,2022 தமிழக முதல்வர் அறிவுரையின் படி மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் மனு அளித்த நபருக்கு இணையவழி மூலமாக ஏமாற்றப்பட்ட ரூ.1 இலட்சத்து 24...

நெல்லையில் கீழே கிடந்த பணப்பையை நேர்மையுடன் காவல்நிலையத்தில் ஒப்படைத்த இளைஞருக்கு துணை கமிஷனர்...

0
நெல்லை மாநகரம் - ஜீன் -27,2022 நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் கிடந்த பணப்பையை நேர்மையுடன் காவல் நிலையத்தில் ஒப்படைத்த அரசு போக்குவரத்து கழக நடத்துனரை பாராட்டி கௌரவித்த நெல்லை மாநகர கிழக்கு காவல்...

நெல்லையில் இன்று சாலை விபத்து ஏற்பட்ட பகுதியில் துணை கமிஷனர் நேரில்...

0
நெல்லை மாநகரம் - ஜீன் -25,2022 நெல்லை மாநகரம் ராஜகோபாலநகர் பகுதியில் நான்கு வழி சாலையில் இன்று சாலை விபத்து ஏற்பட்ட சம்பவ இடத்தைநெல்லை மாநகர கிழக்கு காவல் துணை ஆணையாளர் V.R.ஸ்ரீனிவாசன் ...

சர்வதேச போதை பொருள்‌ ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மணற்சிற்ப கண்காட்சியை போலீஸ்‌‌‌ கமிஷனர்‌‌‌ துவக்கிவைத்தார்

0
சென்னை -ஜீன் -25,2022 சென்னை பெருநகர காவல் ஆணையாளர். சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, மெரினா கடற்கரையில், பள்ளி மாணவர், மாணவியருடன் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் மணற்சிற்ப கண்காட்சியை...

தற்போதைய செய்திகள்