78.7 F
Tirunelveli
Monday, October 18, 2021
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி திருசெந்தூரில் பிரபல ரவுடி கைது - சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை மாவட்ட...

திருசெந்தூரில் பிரபல ரவுடி கைது – சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை மாவட்ட எஸ்.பி உறுதி

தூத்துக்குடி – அக்-01,2021

திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை, கொலை முயற்சி, திருட்டு என 15 வழக்குகளில் ஈடுபட்ட பிரபல ரவுடி கைது – இந்த ஆண்டு இதுவரை தூத்துக்குடி மாவட்டத்தில் 146 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையிலைடைக்கப்பட்டுள்ளனர்- சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கடுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் எச்சரிக்கை.

தூத்துக்குடி மாவட்டத்தில் ரவுடிகள், போக்கிரிகள் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பல்வேறு தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டுள்ளார்.

அவரது உத்தரவின் பேரில் திருச்செந்தூர் உதவி காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் இ.கா.ப மேற்பார்வையில் திருச்செந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் முரளீதரன் தலைமையில் உதவி ஆய்வாளர் சுந்தரம், தலைமைக் காவலர்கள் ராஜ்குமார், இசக்கியப்பன் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் நேற்று (30.09.2021) ரோந்து பணியில் ஈடுபட்ட போது, திருச்செந்தூர் இரயில்வே நிலையம் அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றுகொண்டிருந்த தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் செல்வம் (எ) செல்வமுருகன் (34) என்பவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் அந்த பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து தகராறு செய்து, கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. உடனே மேற்படி போலீசார் எதிரி செல்வம் (எ) செல்வமுருகன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

மேற்படி தனிப்படையினர் விசாரணையில் எதிரி செல்வம் (எ) செல்வமுருகன் மாநில அளவில் தேடப்பட்டு வரும் முக்கியமான கூலிப்படை ரவுடி, இவர் கடந்த 2011ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்தரம் அருகே வன ஊழியர் மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி ஆவார். மேலும் தூத்துக்குடி தாளமுத்துநகர், திண்டுக்கல் மாவட்டம், கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி, சுசீந்திரம், தாமரைக்குளம், கோவை மாவட்டத்தில் ஆனைமலை மற்றும் திருவண்ணாமலை ஆகிய காவல் நிலையங்களில் 7 கொலை வழக்குகள் உட்பட 15 வழக்குகளில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

மேலும் கடந்த ஒரு வாரமாக ரவுடிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் பொருட்டு மாவட்டம் முழுவதும் 450 ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அதில் 90 ரவுடிகள் கைது செய்து சிறையிலக்கப்பட்டுள்ளனர். மற்றவர்களிடம் குற்ற விசாரணை நடைமுறை சட்ட பிரிவு 110 ன் படி இனிமேல் குற்ற வழக்கில் ஈடுபட மாட்டேன் என பிணை பத்திரம் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளளது.

கடந்த வருடம் முழுவதும் 128 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு இதுவரை தூத்துக்குடி மாவட்டத்தில் 146 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கடுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

19,724FansLike
48FollowersFollow
361SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

ஆயுதபடை காவலர்களின்‌‌‌ பணி மாறுதலுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட எஸ்.பி தலைமையில்...

0
தூத்துக்குடி - அக் - 17,2021 தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்கள் தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடை பெற்றது. இன்று தூத்துக்குடி...

விபத்தில் காயமடைந்தவர்களுக்‌‌‌கு முதலுதவி செய்‌‌‌யும்‌‌‌ ஒத்‌‌‌திகை நிகழ்‌‌‌ச்‌‌‌சி மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி தலைமையில் நடைபெற்றது

0
தூத்துக்குடி - அக் -17,2021 இன்று உலக விபத்து காய தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி விவிடி சிக்னல் சந்திப்பில் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் தூத்துக்குடி காவல்துறை சார்பாக விபத்தில் காயம்...

கொலையை திறம்‌‌‌பட புலனாய்வு செய்‌‌‌து குற்‌‌‌றவாளியை கைது செய்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட...

0
திண்டுக்கல் - அக் - 17,2021 திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி அருகே கடந்த 10.10.2021 ஆம் தேதி சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் பிரேதம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதுதொடர்பாக தாண்டிக்குடி...

தேனி – காணாமல்போன 15,லட்‌‌‌சம்‌‌‌ மதிப்புள்ள செல்போன்கள் மீட்பு- மாவட்ட எஸ்‌.பி உரியவர்களிடம் ஒப்படைத்தார்

0
தேனி - அக் - 16,2021 சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான 125 காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்து மீட்டு உரியவர்களிடம் வழங்கிய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப.,...

போதைபொருள் குற்றங்களில் ஈடுபட்டு மனம்திருந்திய பெண்களின்‌‌‌ மறுவாழ்வுக்‌‌‌கான கூட்டம் திருச்‌‌‌சி ஐ.ஜி தலைமையில்...

0
பெரம்பலூர் - அக் - 16,2021 பெரம்பலூர் மாவட்டத்தில் மது, கள்ளச்சாராயம், போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபட்டு மனம் திருந்திய மகளிரின் மறுவாழ்வுக்கான சிறப்பு முகாம் பெரம்பலூர் நகரில் உள்ள கர்ணம் சகுந்தலா திருமண மண்டபத்தில்...

தற்போதைய செய்திகள்