திருநெல்வேலி – அக் – 12,2021
செய்தியாளர் – இம்ரான்
திருநெல்வேலி மேலப்பாளையம் சந்தை ரவுண்டானா அருகே அதிவேகமாக வந்த கார் போலீஸ் பேரி காட்டில் மோதி சாலையின் நடுவே தடுப்பு சுவரின் மீது பாய்ந்து நின்றது
இதனால் நடந்தது என்ன என்று தெரியாமல் வியப்பில் சுற்றியிருந்த பொதுமக்கள் கார் அருகில் சென்று பார்த்தபோது கார் உள்ளே மது பாட்டில் இருந்தது கார் ஓட்டி வந்தவர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் இதனால் மேலப்பாளையம் சந்தை ரவுண்டானாவில் சிறிது பரபரப்பு ஏற்பட்டு சிறிது நேரம் சாலை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது இதையடுத்து தகவலறிந்து வந்த மேலப்பாளையம் C2காவல் நிலைய அதிகாரிகள் போக்குவரத்தினை சரிசெய்து விபத்து நடந்த TN05 AE 6669 ஹூண்டாய் வெர்னா கார் மற்றும் கார்ஓட்டிவந்தவரையும் காவல் நிலையத்திற்க்கு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
இச்சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக சாலையில் சென்ற பொது மக்களுக்கோ அல்லது அந்த வாகன ஓட்டிகோ எந்த விபத்தும் ஏற்படவில்லை.