திருநெல்வேலி – அக்-23,2021
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக ஜாதிரீதியாக நடந்த கொலை சம்பவங்களைத் தொடர்ந்து மேற்கொண்டு எவ்வித அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள போக்கிரிகள் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் இ.கா.ப உத்தரவுபடி காவல்துறையினர் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு கிராமங்கள் வழியாக இயங்கி வரும் தனியார் பேருந்துகள் மற்றும் மினி பஸ்களில் ஜாதி ரீதியான பாடல்கள் ஒலிபரப்பபடுவதன் மூலம் அதில் பயணம் செய்யும் பொதுமக்கள் இளைஞர்கள்,பள்ளி மாணவர்களுக்கிடையே ஜாதி, மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இதனைக் கருத்தில் கொண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து தனியார் பேருந்துகள் மற்றும் மினி பஸ்களில் ஜாதி, மத ரீதியான பாடல்கள் வாகனங்களில் ஒளிபரப்பு செய்வதை தவிர்க்குமாறு தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் இ.கா.ப தெரிவித்துள்ளார். இதனை மீறி செயல்படும் தனியார் பேருந்து மற்றும் மினிபஸ் உரிமையாளர்கள், ஓட்டுநர்கள், நடத்துனர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளடும் என தெரிவித்தார்.