திருநெல்வேலி – அக் – 11,2021
சர்வதேச பெண் குழந்தைகள் தின விழா கொண்டாட்டத்தில் பள்ளி குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய நெல்லை மாநகர காவல் துறை.
திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் முனைவர் செந்தாமரைக் கண்ணன் இ.கா.ப உத்தரவின் பேரில், நெல்லை மாநகர சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் துணை ஆணையாளர் சுரேஷ்குமார் தலைமையில், நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் அரசு பெண்கள் மேல் நிலை பள்ளியில் 11-10-2021 ம் தேதியன்று, சர்வதேச பெண் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நெல்லை மாநகர CWC கூடுதல் காவல் துணை ஆணையாளர் சங்கர் அவர்கள், பெண்கள் மேல் நிலை பள்ளி தலைமை ஆசிரியர் மேபெல்ரனி சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் ரீகன் குழந்தைகள் நல தலைவர் சந்திரகுமார் , நெல்லை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரமேஷ் நன்னடத்தை அலுவலர் ஜோசையா ராஜன் , ACTU காவல் ஆய்வாளர் ஆன்டனி ஜெகதா அவர்கள், மற்றும் JAPU காவல் ஆய்வாளர் அன்னலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடப்பதை தடுப்பது பற்றியும், குற்றங்கள் நடந்தால் செயல்பட வேண்டிய நடவடிக்கைள் பற்றியும் ( உதவி எண் : 1098 ) பள்ளி பெண் குழந்தைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி அறிவுரை வழங்கினார்.