திருப்பத்தூர் – அக் -29,2021
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பெயரில் சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளரின் வழிகாட்டுதலின்படி
சைபர் கிரைம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் பிரேமா
இன்று ஜோலார்பேட்டை டான்பாஸ்கோ மேல்நிலைப்பள்ளியில் சுமார் 300 மாணவர்களுக்கு இணைய வழி மூலமாக நடைபெறும் சைபர் குற்றங்கள் பற்றியும் ஆன்லைன் கேம் விளையாட்டின் மூலம் ஏற்படும் உயிர்சேதம் பண இழப்பு ஆகியவற்றினை பற்றியும் தற்கொலை என்பது எந்த ஒரு பிரச்சனைக்கும் முடிவல்ல என்பது பற்றியும், சைபர் குற்றங்களில் இருந்து நம்மை பாதுகாத்துகொள்ள செய்ய வேண்டிய வழிமுறைகள் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது .
இணையவழி பணமோசடி பற்றிய புகார்களுக்கான கட்டணமில்லா உதவி எண் 155260 ஐ 24 மணி நேரத்திற்குள் தொடர்பு கொள்ளலாம் என்பது பற்றியும்.
சைபர் குற்றங்களை பற்றிய புகாரை இணையவழியில் https://www.cybercrime. பதிவு செய்யலாம் என்பதை பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.