தூத்துக்குடி – அக் – 18,2021
புளியம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொடியன்குளம் தெற்கு காலனியைச் சேர்ந்தவர் வேலு மகன் ராஜ் (71) என்பவரது நிலமும் அதே பகுதியைச் சேர்ந்த மாடசாமி (67) என்பவரது நிலவும் அடுத்தடுத்து இருந்து வந்த நிலையில் இவர்களுக்குள் நில பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்த முன்விரோதம் காரணமாக நேற்று (17.10.2021) ராஜ் யை அவரது வீட்டு முன்பு வைத்து மாடசாமி அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து ராஜ் அளித்த புகாரின் பேரில் புளியம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் தர்மர் வழக்குப்பதிவு செய்து மாடசாமியை கைது செய்தார்.