அரியலூர் – அக் – 22,2021
பள்ளிகள் வரும் 01.10.2021 அன்று திறக்க உள்ள நிலையில் மாணவர்கள் பாதுகாப்பாக சென்று வரும் வாகனங்கள் பராமரிப்புகள் குறித்து அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா முன்னிலையில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயாலுதின் தலைமையில் 5 நபர்கள் கொண்ட குழுவினரால் போக்குவரத்து அலுவலகத்தில் இன்று பள்ளி வாகனங்களை ஆய்வு மேற்கொண்டனர் பிறகு மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு பத்திரிக்கையாளர்களிடம் பேசியதாவது
அனைத்து கல்வி நிறுவனங்களின் வாகனங்களில் பாதுகாப்பு உபகரணங்கள் சரியாக உள்ளதா என ஆய்வு மேற்கொள்கிறோம் முக்கியமாக EMERGENCY EXIT சரியாக உள்ளதா எனவும், தீ தடுப்பு சம்பந்தமான உபகரணங்கள், முதலுதவி பெட்டி முறையாக பராமரிக்கப்படுகிறதா மருந்துகள் காலாவதி ஆகாமல் உள்ளதா என ஆய்வு மேற்கொண்டு வருகிறோம் மாணவர்களின் பாதுகாப்பு கருதி ENTRY மற்றும் EXIT பகுதிகளில் சிசிடிவி கேமரா பொருத்துமாறு அறிவுறுத்தியுள்ளோம் மொத்தம் 213 -க்கும் மேற்பட்ட வாகனங்கள் உள்ளனர். 01.11.2021 அன்று பள்ளிகள் திறக்க இருப்பதால் மேற்கூறியவைகளில் உள்ள குறைகளை மாணவர்களின் பாதுகாப்பு கருதி ஒரு வார காலத்திற்குள் முடித்துக்கொண்டு வாகனங்கள் இயக்குவதற்கு அனுமதி பெற்றுக் கொள்ளுமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.
இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையகம் விஜயகுமார், அரியலூர் RTO பிரபாகரன், அரியலூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மதன் மற்றும் அரியலூர் Motor vehicle inspector பெரியசாமி, அரியலூர் உட்கோட்ட போக்குவரத்து காவல் ஆய்வாளர் புண்ணியமூர்த்தி மற்றும் உதவி ஆய்வாளர், கலந்துகொண்டு பள்ளி வாகனங்களை ஆய்வு மேற்கொண்டனர்.