தூத்துக்குடி – அக்-03,2021
செய்தியாளர் – ரிபாய்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தூத்துக்குடி மாவட்டம் சார்பாக ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி ஆழ்வார்திருநகரி கிளையில் 03/10/2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5 மணியளவில் நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் சம்சுதீன் தலைமை வகித்தார்
மாவட்ட செயலாளர் அஸாருதீன் மாவட்ட பொருளாளர் நாசர் அலி மாவட்ட துணை செயலாளர் சிக்கந்தர் மாவட்ட துணை செயலாளர் இமாம் ஃபரீத் மருத்துவ அணி செயலாளர் முஹம்மது ரஷீத் காமில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
இந்நிகழ்ச்சியில் மாநில செயலாளர்கள் செங்கோட்டை பைசல் மற்றும் செய்யது அலி சிறப்புரை ஆற்றினார்கள்
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக ஆழ்வார்திருநகரி காவல் உதவி ஆய்வாளர் இன்னோஸ் குமார் கலந்து கொண்டார்
இந்நிகழ்ச்சியை ஆழ்வார்திருநகரி கிளை நிர்வாகிகள் பந்தே நவாஸ் , ரியாஸ் , சுலைமான் , கமால்தீன் மற்றும் தொண்டர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்
ஊர் பொதுமக்களும் கலந்துகொண்டு இந்த ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி நடந்ததை வெகுவாக பாராட்டினார்