82.3 F
Tirunelveli
Monday, November 28, 2022
முகப்பு மாவட்டம் திருநெல்வேலி "நெல்லை எஸ்.பி தலைமையில் போலீசாருக்கு அறிவுரை கூட்டம்....

“நெல்லை எஸ்.பி தலைமையில் போலீசாருக்கு அறிவுரை கூட்டம்….

திருநெல்வேலி – அக் – 07,2021

திருநெல்வேலி மாவட்டத்தில் முதற்கட்டமாக பாளையங்கோட்டை,மானூர்,பாப்பாகுடி, அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி 5 யூனியனுக்கும் அக்டோபர் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெற்று முடிந்தது. வருகிற 9-ம் தேதி இரண்டாம் கட்டமாக நாங்குநேரி, களக்காடு,வள்ளியூர்,இராதாபுரம் யூனியனுக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ. மணிவண்ணன் IPS உத்தரவின் படி திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் தேர்தல் பாதுகாப்பு பணியிலும் மற்றும் தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருநெல்வேலி மாவட்ட காவல் துறையினருக்கு தேர்தல் நடைபெறும் நாளான 09.10.2021 காவல்துறையினர் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளை வழங்கினார்.

மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காவல்துறையினருக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து தகவல்களை விளக்கிக் கூறினார். வாக்குச்சாவடிகளில் ஏதேனும் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டால் மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கும் மாவட்ட காவல் அலுவலகத்திற்கும் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் காவலர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு முறைகளைப் முறையாக பின்பற்றி முகக்கவசம் அணிந்து பணியில் இருக்க வேண்டும் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுரை வழங்கினார்.

இக்கூட்டத்தில் திருநெல்வேலி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (தலைமையகம்) மதிவாணன், , சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சீமைசாமி, அவர்கள்,நில அபகரிப்பு சிறப்பு பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளர் ஜெயபால் பர்ணபாஸ், உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர்கள், பயிற்சி துணை காவல் கண்காணிப்பாளர் கள், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், வாக்குப் பெட்டி பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்ட காவல் அலுவலர்கள் , அதிகாரிகள் மற்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

19,724FansLike
124FollowersFollow
394SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லையில் நடைபெறும்‌‌‌ இரண்டாம் நிலை காவலர் எழுத்து தேர்வு நடைபெறும் மையங்களில்...

0
திருநெல்வேலி - நவ -27,2022 Newz - webteam தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலைக் காவலருக்கான எழுத்து தேர்வு இன்று நடைபெற்று வருகிறது. திருநெல்வேலி சரக...

தூத்துக்குடியில் இரண்‌‌‌டாம்‌‌‌ நிலை காவலர் தேர்வு நடைபெறும் மையங்களில் தேர்வு கண்காணிப்பு அதிகாரி டிஐஜி...

0
தூத்துக்குடி - நவ -27,202 Newz - webteam தூத்துக்குடியில் 2022ம் ஆண்டிற்கான காவலர் எழுத்து தேர்வு நடைபெற்று வரும் நிலையில் தேர்வு எழுதும் மையங்களுக்கு தேர்வு கண்காணிப்பு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள...

நெல்லையில் அபகரிக்‌‌‌கபட்ட 90,செண்ட் நிலம் மீட்பு மாவட்ட எஸ்பி உரியவரிடம் வழங்கினார்

0
திருநெல்வேலி - நவ -26,2022 Newz - webteam 90 செண்ட் நிலத்தை மீட்க காரணமாக இருந்த நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல்துறையினர். திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளையை சேர்ந்த சரோஜா என்பவருக்கு சொந்தமான...

நாளை நடைபெறும் இரண்டாம் நிலை காவலர் தேர்வின் விதிமுறைகள் குறித்து மாவட்ட எஸ்பி அறிக்கை...

0
தூத்துக்குடி - நவ -26,2022 Newz - webteam நாளை நடைபெறவுள்ள காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலைக் காவலருக்கான எழுத்து தேர்வில் கலந்து கொள்ளும் தூத்துக்குடியில் தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்களுக்கு மாவட்ட...

நாளை நடைபெறவுள்ள இரண்டாம் நிலை காவலர்கள் தேர்வுக்கு போலீசார் செய்யவேண்டிய பணிகள் குறித்து மாவட்ட...

0
திண்டுக்கல் - நவ -26,2022 Newz - webteam நாளை நடைபெற உள்ள காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலைக் காவலருக்கான எழுத்து தேர்வுக்கு காவல்துறையினர் செய்ய வேண்டிய பணிகள் குறித்து திண்டுக்கல்...

தற்போதைய செய்திகள்