கன்னியாகுமரி – அக் -15,2021
சுதந்திர இந்தியாவை தனது அயராத உழைப்பின் காரணமாக முழுதேசமாக ஒருங்கினைத்ததின் மூலம் இந்தியாவின் இரும்பு மனிதர் என பாராட்டப்படும் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளான அக்டோபர் 31-ம் தேதி தேசிய ஒற்றுமை தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது, இவ்வாண்டு மத்திய அரசின் அறிவுறுத்துதலின் பேரில் தேசிய ஒற்றுமை தினத்தை கொண்டாடும் விதமாக நாட்டின் நாண்கு திசைகளிலும் அமைந்துள்ள ஜம்மு காஷ்மீர், தமிழ்நாடு, குஜராத் மற்றும் திரிபுரா மாநிலங்களின் காவல்துறை சார்பாக இருசக்கர பேரணி ஆரம்பிக்கப்பட்டு குஜராத் மாநிலத்தின் கவேடியா மாவட்டத்தில் நர்மதா நதி கரையில் அமைந்துள்ள “ஒற்றுமையின் சிலை” என்றழைக்கப்படும் சர்தார் வல்லபாய் பட்டேலின் திருவுருவ சிலையினை சென்றடைய தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழக காவல்துறை சார்பாக தமிழ்நாடு சிறப்பு காவல்படை துணை தளவாய் குமார் தலைமையில் 25 இருசக்கர வாகன ஒட்டும் வீரர்கள் மற்றும் 16 உதவி பங்கேற்பாளர்களுடன் இருசக்கர வாகன பேரணி கன்னியாகுமரி மகாத்மா காந்தி நினைவு மண்டபத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டு திண்டுக்கல், ஒசூர், சித்திரதுர்க்கா, ஹூப்ளி, ஹோல்கப்பூர், பூனே, தானே, சூரத், நர்மதா வழியாக 2085 கி.மீட்டர் தூரத்தை 10 நாட்களில் கடந்து வருகிற 24.10.2021 அன்று ஒற்றுமையின் சிலையினை அடைகிறார்கள். மேலும் 31.10.2021 அன்று நடைபெற உள்ள தேசிய ஒற்றுமைதின விழாவில் பங்கேற்கிறார்கள். தமிழக அரசு மற்றும் காவல்துறை தலைமை இயக்குநர் அறிவுறுத்துதலின் பேரில் மேற்படி சிறப்புமிகு பேரணியை இன்று தமிழ்நாடு சிறப்பு காவன்படை கூடுதல் காவல்துறை இயக்குநர் அபய்குமார் சிங், இ.கா.ப., கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் நெல்லை சரக காவல்துறை துணைத்தலைவர் பிரவீன்குமார் அபினபு, இ.கா.ப., குமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த், இ.ஆ.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) மகேஷ்வரன், தமிழ்நாடு சிறப்பு காவல் படை இரண்டாம் பட்டாலியன் தளவாய் அந்தோணி ஜாண்சன் ஜெயபால் ஆகியோர் கலந்து கொண்டு வீரர்களை வாழ்த்தினர். இப்பேரணிக்கு வாகனங்கள் வழங்கி, வாகனங்கள் சம்மந்தப்பட்ட அனைத்து உதவிகளையும் வழங்கிய Royal Enfield நிறுவனத்தின் Executive Director கோவிந்த ராஜன் அவர்களுக்கு நன்றியை தமிழ்நாடு காவல் துறை தெரிவித்து கொள்கிறது.