கோயம்புத்தூர் – அக்-01,2021
கடத்தப்பட்ட குழந்தையை உடனடியாக மீட்ட தனிப்படையினருக்கு கோவை சரசு D.L.G முனைவர்.முத்துசாமி. இ.கா.பபாராட்டு
கோவை மாவட்டத்தில் ஆனைமலை காவல் நிலையத்திற்குட்பட்ட பழைய பேருந்து நிலைய பகுதியில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சங்கீதா என்பவர் பழைய துணிகளை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். கடந்த 28.09.2021-ம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 7.30 மணிக்கு ஆனைமலை பேருந்து நிலையத்தில் சங்கீதா தனது 5 மாத குழந்தையுடன் பிச்சை எடுத்து வந்துள்ளார். அச்சமயம் அடையாளம் தெரியாத நபர் தனக்கு சில்லிசிக்கன் வாங்கிவரும்படி சங்கீதாவிடம் 50 ரூபாய் பணம் தந்தார். சங்கீதா அவரது 5 மாத குழந்தையை அவரிடம் விட்டுச்சென்று அருகிலுள்ள கடைக்கு சில்லிசிக்கன் வாங்க சென்றுள்ளார். சங்கீதா திரும்பி வந்து பார்த்தபோது அவரது ஐந்து மாத குழந்தையை அடையாளம் தெரியாத நபர்கள் கடத்திச் சென்றது தெரியவந்தது. இது சம்பந்தமாக சங்கீதா ஆனைமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் அடிப்படையில் உடனடியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கின் எதிரிகளை உடனே கண்டுபிடித்து, குழந்தையை உடனடியாக மீட்பதற்கு மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர், இ.கா.ப., உத்தரவிட்டார். எனவே கோவை சரக காவல்துறை துணைத்தலைவர் முனைவர். முத்துசாமி, இ.கா.ப., வழிகாட்டுதலின்படி, கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் .செல்வநாகரத்தினம், இ.கா.ப. மேற்பார்வையில் வால்பாறை உட்கோட்ட காவல் துணைக்கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. அத்தனிப்படையினர் சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் 20 கிலோமீட்டர் தொலைவு வரை உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து அங்களக்குறிச்சி கிராமத்தில் எதிரிகளை சுற்றி வளைத்து பிடித்து, ஆனைமலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதன் அடிப்படையில் ஆனைமலை காவல் ஆய்வாளர் கற்பகம் அவர்கள் குழந்தையை திருடிச் சென்ற ராமர், முருகேசன் மற்றும் முத்துப்பாண்டி ஆகிய மூவரையும் விசாரித்து ராமர் மற்றும் முருகேசன் ஆகிய இருவரும் குழந்தையை கடத்திச் சென்று ரூபாய் 90,000/ பணத்திற்கு முத்துப்பாண்டியிடம் குழந்தையை விற்க முயன்றதால் எதிரிகளை கைது செய்தார். குழந்தையை கைப்பற்றி குழந்தையின் தாயாரிடம் நேற்று (30.09.2021) காவல்துறையினர் ஒப்படைத்தபோது, குழந்தையின் பெற்றோர்கள் காவல்துறைக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.