திருநெல்வேலி – அக் – 23,2021
போக்சோ வழக்கில் கைதான ஆட்டோ டிரைவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை பெற்று கொடுத்த திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர்.
கடந்த 2016ம் வருடம் பனையங்குறிச்சியை சேர்ந்த கதிரேசன்(30)
என்பவர் அதே பகுதியை சேர்ந்த சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி தவறாக நடந்துள்ளார்.
இதுகுறித்து பாப்பாக்குடி காவல் துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு கதிரேசனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கு போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இன்று மேற்படி வழக்கை விசாரித்த போக்சோ நீதிமன்ற நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட கதிரேசனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும்,ரூ 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை மேற்கொண்டு எதிரிக்கு சிறை தண்டனை பெற்று கொடுத்த பாப்பாகுடி காவல்நிலைய காவல்துறையினரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன்,IPS., வெகுவாக பாராட்டினார்.