தூத்துக்குடி – அக் – 30,2021
114வது தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த தேவர் ஜெயந்தி மற்றும் குரு பூஜை விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கோபி, 10 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 40 காவல் ஆய்வாளர்கள், 114 உதவி ஆய்வாளர்கள் உட்பட 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட எல்லையோரங்களில் 12 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாவட்டம் முழுவதும் போலீசாரின் பாதுகாப்பு பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் நேரடியாக ரோந்து சென்று பார்வையிட்டு வருகிறார்.