93.9 F
Tirunelveli
Friday, August 12, 2022
முகப்பு மாவட்டம் சென்னை வேறு ஒருவரின் ஆதார் மற்றும் பான் கார்‌‌‌டை பயன்‌‌‌படுத்தி 1,கோடி வரிமோசடி

வேறு ஒருவரின் ஆதார் மற்றும் பான் கார்‌‌‌டை பயன்‌‌‌படுத்தி 1,கோடி வரிமோசடி

சென்னை – அக் -31,2021

வேறொரு நபரின் பான் மற்றும் ஆதார் அட்டைகளை பயன்படுத்தி பணபரிமாற்றம் செய்து அரசுக்கு ரூ.1.75 கோடி GST வரி ஏய்ப்பு இழப்பு செய்த 2 குற்ற எதிரிகளை கைது செய்த, மத்திய குற்றப்பிரிவு காவல் குழுவினரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

அனுஷா அருண்ராஜ் என்பவரின் பான் மற்றம் ஆதார் அட்டைகளை யாரோ ஒரு நபர் பயன்படுத்தி, போலியான ஒரு நிறுவனத்தின் பெயரில் வங்கி கணக்கு தொடங்கி, பல கோடி ரூபாய்க்கு பணபரிமாற்றம் செய்து, ரூ.1.75 கோடி GST வரி செலுத்த வேண்டும் என அனுஷா அருண்ராஜ்க்கு நோட்டீஸ் வந்துள்ளது. இது குறித்து அனுஷா கொடுத்த புகாரின் மீது மத்திய குற்றப்பிரிவு, நம்பிக்கை ஆவணங்கள் மோசடி புலனாய்வு பிரிவில் (EDF) வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

நம்பிக்கை ஆவணங்கள் மோசடி புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் சித்ரா, உதவி ஆய்வாளர்கள் லோகேஷ்வரன், சுஜாதா, தலைமைக் காவலர்கள் ஏழுமலை யேசுராஜ் முதல்நிலைக் காவலர் பாலசுப்ரமணியம் மற்றும் காவலர் மோகனவிக்னேஷ் ஆகியோர் அடங்கிய காவல் குழுவினர் விசாரணை மேற்கொண்டதில், எதிரிகள் MMM என்டர்பிரைசஸ், என்ற நிறுவனத்தின் பெயரில் பல கோடி ரூபாய்க்கு பணபரிமாற்றம் செய்ததும், இந்நிறுவனத்திற்கு அடையாள ஆதாரமாக புகார்தாரர் அனுஷா அருண்ராஜின் பான் மற்றும் ஆதார் அட்டை எண்களை பயன்படுத்தியதும், அதன்பேரில் மேற்படி பரிமாற்றத்துக்கு ரூ.1.75 கோடி GST வரி செலுத்த வேண்டும் என புகார்தாரர் அனுஷா அருண்ராஜ்க்கு நோட்டீஸ் வந்ததும் தெரியவந்தது. அதன்பேரில், காவல் குழுவினர் மேற்படி மோசடியில் ஈடுபட்ட 1) முகமது இப்ராகிம், 2) யூசுப் ஆகிய 2 நபர்களை கைது செய்தனர். மேற்படி எதிரிகள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மேற்படி வழக்கில் சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த, மத்திய குற்றப்பிரிவு, காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

19,724FansLike
99FollowersFollow
388SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லை மேலப்பாளையத்தில் குட்கா பொருட்‌‌‌கள்‌‌‌ விற்‌‌‌பனை செய்‌‌‌த கடைக்கு போலீஸ்‌‌‌ துணை கமிஷனர்‌‌‌ சீல்!!!

0
நெல்லை - ஆகஸ்ட் -12,2022 நெல்லை மேலப்பாளையத்தில் குட்கா பொருட்‌‌‌கள்‌‌‌ விற்‌‌‌பனை செய்‌‌‌த கடைக்கு போலீஸ்‌‌‌ துணை கமிஷனர்‌‌‌ சீல் மேலப்பாளையம் சந்தை ரவுண்டானா அருகில் கிருஷ்ண குமார் என்பவரின் கடை சீல் வைக்கப்பட்டது குட்கா...

நெல்லை தூய சவேரியர்‌ பள்ளியில் போதைப்‌‌‌பழக்‌‌‌கத்‌‌‌தால்‌‌‌ ஏற்படும் விளைவுகள் குறித்து துணை...

0
நெல்லை - ஆகஸ்ட் -11,2022 நெல்லை பாளையில் போதை பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அறிவுரைகளை வழங்கிய நெல்லை மாநகர கிழக்கு காவல்...

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் மாவட்ட எஸ்பி போதைப்பொருள் விழிப்புணர்வு

0
தூத்துக்குடி - ஆகஸ்ட் - 11,2022 தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்றது. போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவதற்கு...

ஆற்றில் விழுந்த ஆசிரியரின் உயிரை காப்பாற்றிய காவலருக்கு மாவட்ட எஸ்பி பாராட்டு

0
திருவாருர் - ஆகஸ்ட் - 11,2022 மகிழஞ்சேரி, ஆதிலட்சுமி நகரைச்சேர்ந்த உஷா, க/பெ தினேஷ்குமார் என்பவர் ஆணைகுப்பம் தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 08.08.2022 தேதி ஸ்கூட்டரில் சென்ற போது எதிரே...

மெச்சதகுந்த பணிக்காக போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்றிதழ் வழங்கி பாராட்டு!!!

0
தேனி - ஆகஸ்ட் -10,2022 மெச்சத்தகுந்த பணியை பாராட்டி காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கிய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேனி மாவட்டம்போடி நகர் காவல் நிலையம் மற்றும் பழனிசெட்டிபட்டி காவல்...

தற்போதைய செய்திகள்