திருநெல்வேலி – செப் -27,2021
கொரனா காலத்தில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து பிரம்மா கேள்வி :
திருநெல்வேலி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரனா காலத்தில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து வழக்கறிஞர் பிரம்மா தகவல் உரிமை சட்டத்தில் தகவல் கோரியிருந்த நிலையில் மாநில தகவல் ஆணையம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது
திருநெல்வேலி மருத்துவகல்லூரி மருத்துவமணையில் கொரனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் கொரனா காலத்தில் சிகிச்சையளிக்க மருத்துவர்கள் மற்றும் செவிலயர்கள் தங்கவைக்கபட்ட விடுதி மற்றும் வழங்கபட்ட உணவு போன்றவைகளில் பல்வேறு முறைகேடு நடந்திருபதாக கருதி திருநெல்வேலியில் உள்ள சமுக ஆர்வலரும் நுகர்வோர் வழக்கறிஞருமான பிரம்மா. தகவல் உரிமை சட்டத்தில் மனு செய்திருந்தார் ஆணால் மருத்துவ கல்லூரி நிர்வாகம் தொடர்ந்து பதிலளிக்க மறுத்த வந்த நிலையில் பிரம்மா தகவல் உரிமை ஆனையத்திற்க்கு மேல் முறையீடு செய்திருந்தார் இந்நிலையில்
மாநில தகவல் உரிமை ஆணையம் அதிரடி உத்தரவு :
திருநெல்வேலி மருத்துவ கல்லூரி மருத்துவமனை பொதுதகவல் அலுவலருக்கு மாநிலதகவல் உரிமைஆணையர் செல்வராஜ் உத்தரவு ஒன்று் பிறப்பித்துள்ளார் அதில் மனுசெய்திருந்த மனுதாரர் பிரம்மாவை நேரில் அழைத்து் அவர் கேட்ட தகவல் அனைத்தையும் வழங்கி அவர் பார்வையிடுவதை வீடியோவாக எடுத்து் தகவல் உரிமை ஆணையத்திற்க்கு அனுப்பவேண்டும் அதை தவறும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது