திருவள்ளூர் – செப்-06,2021
சென்னையை அடுத்த பொன்னேரியில் ரேசன் அரிசியை ஆந்திராவிற்கு கடத்திய இருவர் கைது.
சிவில் சப்ளை CID போலிசாருக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் சிவில் சப்ளை காவல் துணை ஆணையாளர் ஜான் சுந்தர் அவர்களின் தலைமையில் சிறப்புக்குழு உடனடியாக களத்தில் இறங்கி பொன்னேரியை அடுத்த ஆலடு என்ற கிராமத்தில் ஒரு வீட்டை முற்றுகையிட்டு சோதனை செய்தது, அப்போது ஆந்திராவிற்கு புறப்பட தயாராக இருந்த லாரியில் 100 மூட்டைகள் ரேசன் அரிசி ஏற்றப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. லாரியை சுற்றிவளைத்த போலிசார் லாரியின் ஓட்டுநர் மற்றும் உரிமையாளர் செல்வராஜ்(23) என்பவரையும் மற்றும் ரேசன் கடையில் பணி ஓய்வு பெற்று மீண்டும் வேலை செய்து வந்த தாமோதரன்(61) என்பவரையும் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.
விசாரணையில் இவர்கள் சுற்றுப்பகுதிகளில் இருந்து ரேசன் அரிசியை வாங்கி ஆந்திராவிற்கு எடுத்துச்சென்று பாலிஷ் செய்து மீண்டும் வெளிச்சந்தையில் விற்று வருவது தெரியவந்தது.