கன்னியாகுமரி – செப் -08,2021
கன்னியாகுமரி மாவட்டதில் போதை பொருட்களுக்கு எதிரான தொடர் நடவடிக்கையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெ. பத்ரி நாராயணன் IPS ஈடுபட்டு வருகிறார். போதை பொருட்களை ஒடுக்க தனிப்படை அமைத்து தீவிர கண்காணிப்பில் இருக்க உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் இன்று கிடைத்த ரகசிய தகவலின் படி நாகர்கோவில் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் நவீன்குமார் மேற்பார்வையில் கோட்டார் காவல் நிலைய காவல் ஆய்வாளர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் உதவி ஆய்வாளர் விஜயன் தனிப்படை உதவி ஆய்வாளர் மகேஸ்வர ராஜ் மற்றும் தனிப்படையினர் சகிதம் அண்ணா பேருந்து நிலையம் அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த மூன்று நபர்களை பிடித்து விசாரணை செய்த போது அவர்கள் கேரளாவை சேர்ந்த முகமது இஸ்லாம்(22), முகமது ஷாபி(21) மற்றும் வடசேரி பகுதியை சேர்ந்த ஷகின் ஹான்(19) என்பது தெரியவந்தது. மேலும் அவர்களை தீவிர விசாரணை செய்த போது அவர்கள் விலை உயர்ந்த போதை பொருட்களான LST stamp, MDMA, Methamphetamine Crystal, மற்றும் Nitravet போன்ற பல போதை போதை பொருட்களை அந்த பகுதிகளில் விற்பனை செய்ய வைத்திருந்தது தெரியவந்தது. பின்பு அவர்கள் வைத்திருந்த போதை பொருட்களை பறிமுதல் செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தார். விலை மதிப்புள்ள வீரியமிக்க போதை பொருட்களை பிடித்த போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார்.