சென்னை- செப் -07,2021
மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரிடம் வங்கியிலிருந்து பேசுவதாக கூறி OTP எண்ணை பெற்று மோசடி செய்த டெல்லியைச் சேர்ந்த 2 நபர்களை கைது செய்த மத்திய குற்றப்பிரிவு காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.
மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரை செல்போனில் அழைத்த நபர், வங்கியிலிருந்து பேசுவதாகவும், உங்களது கிரெடிட் கார்டுக்கு பரிசுகள் கிடைத்திருப்பதாகவும், கிரெடிட் கார்டு விவரங்களை கொடுத்த பரிசு பொருளை பெற்றுக் கொள்ளுமாறு விவரங்கள் மற்றும் OTP எண்ணை பெற்று அவரது கிரெடிட் கார்டிலிருந்து ரூ.1,08,740/- பணம் எடுத்து மோசடி செய்துள்ளனர். மேற்படி சம்பவம் குறித்து கோவிந்தராஜ் சென்னை பெருநகர காவல் ஆணையாளரிடம் கொடுத்த புகார் மீது மத்திய குற்றப்பிரிவு, வங்கி மோசடி தடுப்புப்பிரிவில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
மத்திய குற்றப்பிரிவு மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையாளர் தேன்மொழி, இ.கா.ப., அறிவுரையின்பேரில், துணை ஆணையாளர் நாகஜோதி ஆலோசனையின்பேரில், வங்கி மோசடி புலனாய்வு பிரிவு உதவி ஆணையாளர் பிரபாகரன் தலைமையில், வங்கி மோசடி புலனாய்வு பிரிவு ஆய்வாளர் புஷ்பராஜ், உதவி ஆய்வாளர்கள் பிரேம்குமார், சுரேஷ்குமார், தலைமைக் காவலர்கள் ஜெகநாத், ஸ்டாலின், கோமதி, சுபஜாராணி ஆகியோர் அடங்கிய தனிப்படை காவல் குழுவினர் விசாரணை மேற்கொண்டு மேற்படி மோசடி கும்பலைச் சேர்ந்த 1.அதுல்குமார் டெல்லி, 2) குணால், காசியாபாத் ஆகியோரை டெல்லியில் கைது செய்தனர். அவர்களிடமிருந்து பணம் ரூ.1 லட்சம் கைப்பற்றப்பட்டது. மேற்படி எதிரிகள் மீதுநீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மேற்படி வழக்கில் சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த, மத்திய குற்றப்பிரிவு, காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.