78.4 F
Tirunelveli
Wednesday, January 19, 2022
முகப்பு மாவட்டம் திருநெல்வேலி நெல்லையில் 20,லட்சம் மதிப்புள்ள நிலம் மீட்பு - நிலஅபகரிப்‌‌‌பு பிரிவு போலீசாருக்‌‌‌கு மாவட்ட எஸ்‌‌‌.பி...

நெல்லையில் 20,லட்சம் மதிப்புள்ள நிலம் மீட்பு – நிலஅபகரிப்‌‌‌பு பிரிவு போலீசாருக்‌‌‌கு மாவட்ட எஸ்‌‌‌.பி பாராட்‌‌‌டு

திருநெல்வேலி – செப் – 04,2021

20 லட்சம் மதிப்புள்ள நிலத்தை, உரிமையாளருக்கு மீட்டுக்கொடுத்த திருநெல்வேலி மாவட்ட நில அபகரிப்பு பிரிவு காவல் துறையினரை பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

திருநெல்வேலிமாவட்டம், சேரன்மகாதேவி அருகேஉள்ள திருவிருத்தான்புள்ளி,அந்தோணி நகரைச் சேர்ந்த பூஞ்சோலை என்பவருக்கும், அவரது சித்தப்பாவின் மகன் செல்வராஜ் குடும்பத்தினர்‌‌‌க்‌‌‌கும் அந்தோணி நகரில் பூர்விகமாய் பாத்தியப்பட்ட 78 சென்ட் நிலம் உள்ளது‌.மேற்படி சொத்து வாரிசின் அடிப்படையில் இந்நிலத்தின் மேல்பாகம் 39 சென்ட் நிலம் பூஞ்சோலை என்பவருக்கும், கீழ்ப்பாகம் உள்ள நிலம் செல்வராஜ் என்பவருக்கும் சொந்தமானதாகும். மேற்படி செல்வராஜ் அவருக்கு சொந்தமான 39சென்ட் நிலத்தினை அவர் வைத்துக்கொண்டு மேல்பாகம் உள்ள பூஞ்சோலைக்கு சொந்தமான இடத்தினை அவரது சகோதரரான பால் பாண்டிக்கு எழுதிக் கொடுத்துள்ளார். பால்பாண்டி அந்த இடத்தினை அவரது மகன்களான நடராஜன்(30) மற்றும் வெற்றிவேல்(28) ஆகியோர்களுக்கு எழுதிக் கொடுத்துள்ளார். இந்நிலையில் செல்வராஜ், உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார். மேற்படி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பூஞ்சோலையின் மகள் எஸ்தர் கலையரசி(50), என்பவர் தனது தாயார்க்கு சொந்தமான நிலம் நடராஜன் மற்றும் வெற்றிவேல் என்பவரின் பெயரில் இருப்பதை அறிந்த எஸ்தர்கலையரசி, தனது தாயாரின் நிலத்தினை மீட்டு தருமாறு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன்,இ.கா.ப, அவர்களிடம் மனு அளித்தார், மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி திருநெல்வேலி மாவட்ட நில அபகரிப்பு சிறப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் ஜெயபால் பர்னபாஸ்‌‌‌க்‌‌‌கு உத்தரவிட்டதன் பேரில் நில அபகரிப்பு பிரிவு ஆய்வாளர் சாந்தி தலைமையிலான உதவி ஆய்வாளர் தனலெட்சுமி, தலைமை காவலர் நாகராஜன் ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டு 20 லட்சம் மதிப்பிலான 39 சென்ட் நிலத்தை மீட்டு அதற்கான ஆவணத்தை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன்,இ.கா.ப., நிலத்தின் உரிமையாளரான பூஞ்சோலைக்‌‌‌கு இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து வழங்கினார்

19,724FansLike
57FollowersFollow
381SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லையில்‌‌‌ வாலிபர் மீது குண்டாஸ் போலீஸ்‌‌‌ கமிஷனர் அதிரடி

0
திருநெல்வேலி - ஜன - 19,2022 கொலை முயற்சி, பொதுமக்களை அச்சுறுத்துதல் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது. திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை பகுதியில் பல்வேறு வழக்குகளில்...

எஸ்பி அலுவலகத்திற்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் மரியாதையாக நடந்துவரும் காவலருக்கு எஸ்பி பாராட்டு

0
திருநெல்வேலி - ஜன -19,2022 புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் பிரச்சனைகளை கேட்டறிந்து அவர்களிடம் கனிவாக நடந்து கொண்டு சிறப்பாக பணிபுரிந்து வரும் காவலருக்கு பாராட்டு. திருநெல்வேலி மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவலர் ஜெஸ்கர்,...

“கூடைபந்து போட்டியில் பதக்கம் வென்ற ஆயுதபடை காவலருக்கு எஸ்பி பாராட்டு…..

0
தூத்துக்குடி - ஜன -19,2022 தமிழக காவல் துறையினருக்கான மண்டலங்களுக்கிடையே நடைபெற்ற போட்டிகளில் கூடைப்பந்து விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்று இரண்டாம் இடத்தை பிடித்து பதக்கங்கள் பெற்ற தூத்துக்குடி மாவட்ட காவல்துறையைச் சேர்ந்த தலைமை...

“சுமார் 30,ஆயிரம்‌‌‌ மதிப்புள்ள 45,கிலோ குட்கா மற்‌‌‌றும்‌‌‌ பைக்‌‌‌ பறிமுதல் இருவர் கைது”

0
தூத்துக்குடி - ஜன -18,2022 தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக விற்பனைக்காக புகையிலை பொருள்களை இருசக்கர வாகனத்தில் கடத்தி வந்த இருவர் கைது - ரூபாய் 33,500/- மதிப்புள்ள...

“இலங்கைக்கு கடத்த முயன்ற 170,கிலோ கஞ்சா பறிமுதல் 9,பேர் கைது”

0
நாகப்பட்டினம் - ஜன -18,2022 செய்தியாளர் - சோமாஸ்கந்தன் சட்ட விரோதமாக கஞ்சா கடத்த முயன்ற 09 நபர்கள் கைது மற்றும் 170 கிலோ கஞ்சா மற்றும் கார் பறிமுதல்: நாகப்பட்டினம் மாவட்டத்தில் கஞ்சா கடத்தல்...

தற்போதைய செய்திகள்