தேனி – செப் – 06,2021
20 லட்சம் ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகள் பறிமுதல்.! இரண்டு நபர்களை அதிரடியாக சுற்றி வளைத்து கைது செய்த இராயப்பன்பட்டி காவல் நிலைய காவல்துறையினர். இராயப்பன்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆனைமலையன்பட்டி பகுதியில் கள்ள நோட்டுகளுடன் கும்பல் சுற்றி திரிவதாக கிடைத்த இரகசிய தகவலின் பேரில் உத்தமபாளையம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் உமாதேவி உத்தரவின் பேரில் கம்பம் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் புவனேஸ்வரி ,இராயப்பன்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாயன் தலைமையிலான காவல்துறையினர் அப்பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது ஆனைமலையன்பட்டி வெள்ளைக்கரடு பகுதியில் சந்தேகப்படும்படியான இரண்டு நபர்கள் பையுடன் நின்று கொண்டிருந்ததை பார்த்த காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை செய்த போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணான வகையில் பதில் அளித்ததை தொடர்ந்து, பின் அவர்களிடமிருந்த பைகளை சோதனை செய்த போது அதில் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகள் இருப்பது தெரியவந்ததையடுத்து, இரண்டு நபர்களை அதிரடியாக சுற்றிவளைத்து கைது செய்து, அவர்களிடமிருந்த 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்து இரண்டு நபர்களின் மீதும் வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர். 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்து, வழக்கில் தொடர்புடைய இரண்டு நபர்களை கைது செய்து சிறையில் அடைத்த இராயப்பன்பட்டி காவல் நிலைய காவல் துறையினரின் பணி சிறக்க தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப., தனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார். மேலும் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டு எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என்று தேனி மாவட்ட காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.