திருச்சி – செப் – 18,2021
செய்தியாளர் – எஸ்.எம்.பாரூக்
படம் எடுப்பதாக கூறி கேமரா மற்றும் லென்ஸ்களை திருடிச் சென்றவர்களை பிடித்த தனிப்படையினருக்கு நேரில் அழைத்து
திருச்சி மாவட்டம்,07.09,2021 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த அபிராஜ் வயது (26) இவர் சென்னையில் உதவி கேமராமேனாக பணிபுரிந்து வருகிறார்.
இவரிடம் திருச்சி உறையூரை சேர்ந்த நான்கு நபர்கள் சேர்ந்து சினிமா படம் எடுப்பதாக கூறி கேமராக்களை வாடகைக்கு தருமாறு கேட்டிருந்தனர்.
இதனை நம்பி அபிராஜ் ரூபாய் 10 லட்சம் மதிப்புள்ள கேமரா மற்றும் லென்ஸ்களை சென்னையில் இருந்து எடுத்து வந்து கடந்த 7ஆம் தேதி அன்று அவர்கள் கூறிய புலிவலம் அருகே இலுப்பையூர் என்ற இடத்திற்கு சென்று கொடுத்துள்ளார்.
அங்கு அவர்கள் சினிமா எடுப்பது போல் நாடகமாடி நான்கு பேரும் சேர்ந்து கேமராக்களை கொள்ளையடித்து சென்றனர்.
இச்சம்பவத்திற்கு பிறகு அபிராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர்.பா.மூர்த்தி இ.கா.ப உத்தரவின் படி தனிப்படை அமைக்கப்பட்டு தேடிவந்த நிலையில் 16.09.2021 அன்று இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கையும் களவுமாக பிடித்தனர்.
மேலும் குற்றவாளிகளை பிடிப்பதற்கு சிறப்பாக செயல்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களை திருச்சி சரக காவல் துணை தலைவர் ராதிகா இ.கா.ப அவர்கள் மற்றும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி இ.கா.ப நேரில் அழைத்து பாராட்டினார்.