திருநெல்வேலி -செப் -25,2021
தமிழக சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி சைலேந்திரபாபு இ.கா.ப இன்று மாலை நெல்லை மாநகரம் பாளையங்கோட்டை காவல் நிலையத்திற்கு நேரடியாக சென்று காவல் ஆளிநர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்கள் மேலும் நெல்லை மாவட்ட மற்றும் மாநகர ஆயுதப்படை காவலர் குடியிருப்புகளை ஆய்வு செய்து காவலர்களின் குடும்பத்தினர் குறைகளையும் மற்றும் காவலர்களின் குழந்தைகள் படிப்பு சம்பந்தமாக பாசத்துடன் விசாரித்தார்கள். உடன் தென்மண்டல காவல் துறை தலைவர் அன்பு இ.கா.ப , நெல்லை மாநகர காவல் ஆணையாளர் செந்தாமரைக் கண்ணன் இ.கா.ப ,மற்றும் நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர்கள் சுரேஷ்குமார் சட்டம் மற்றும் ஒழுங்கு சுரேஷ்குமார் குற்றம் மற்றும் போக்குவரத்து அவர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்