திண்டுக்கல் – செப் -07,2021
திண்டுக்கல் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் மாவட்டத்தில் உள்ள காவல் வாகனங்களை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது காவல் வாகனங்களில் உள்ள ஒலிபெருக்கிகள், விளக்குகள் மற்றும் இதர உபகரணங்கள் சரியாக வேலை செய்கிறதா என்பதை ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் காவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாகனங்களை முறையாக கவனித்து அவற்றை பாதுகாப்புடன் இயக்கும் படியும் அறிவுரை கூறினார்