கிருஷ்ணகிரி – செப் -09,2021
வழிப்பறி குற்ற வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளை அதிரடியாக கைது செய்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் சீர்மிகு பணியை பாராட்டி சான்றிதழ் வழங்கிய கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
அட்கோ காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 1.Cr.No.326/2021 U/S 392 IPC,2.Cr.No.403/2021 U/S 394 IPC ஆகிய இரண்டு வழக்கில் வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை அதிரடியாக கைது செய்து அவர்களிடமிருந்து ஒரு பவுன் தங்கச் செயின்,ஒரு செல்போன் மற்றும் 3 செல்போன்கள், டைட்டான் வாட்ச் ஓன்று பறிமுதல் செய்து நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்திய சீர்மிகு பணியை பாராட்டி காவல் ஆய்வாளர் தங்கவேல் அவர்கள்,காவல் உதவி ஆய்வாளர் வினோத் குமார் மற்றும் தலைமை காவலர் சென்ன கிருஷ்ணன்,காவலர் சதீஷ்குமார் காவலர்களுக்கு
மற்றும் ஓசூர் டவுன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் Cr.No.196/2021 U/S 392 IPC வழிப்பறி வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைவில் கைது செய்து அவர்களிடமிருந்து 6 பவுன் தங்க தாலிசெயின் பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்திய காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் திரு.யுவராஜ் அவர்கள் மற்றும் முதல் நிலை காவலர்கள் ராமசாமி, அப்துல்சமீர் காவலர்களுக்கு
மற்றும் மத்திகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் Cr.No.242/2021 U/S 394 IPC வழிப்பறி வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைவில் கைது செய்து அவர்களிடமிருந்து ஒரு செல்போனை பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்திய காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் சிற்றரசு மற்றும் தலைமை காவலர் தீர்த்தகிரி சின்னதுரை, முதல் நிலை காவலர் சக்தி காவலர்களுக்கு மற்றும் சூளகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் Cr.No.587/2021 U/S 392 IPCவழிப்பறி வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைவில் கைது செய்து அவர்களிடமிருந்து Bajaj Pulsar இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்திய தலைமை காவலர் திரு.ரஞ்சித்குமார்,முதல் நிலை காவலர் அம்சராஜ் காவலர்களுக்கு மேற்கண்ட வழக்குகளில் சிறப்பாக பணிபுரிந்த கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறையினரின் சீர்மிகு பணியைப் பாராட்டி நற்சான்றிதழ்கள் வழங்கியும், தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.