திண்டுக்கல் – செப் – 07,2021
திண்டுக்கல் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் உள்ள பழனி மஹாலில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் தலைமையில் மாதாந்திர குற்றக் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் உள்ள பழனி மஹாலில்
இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் தலைமையில் மாதாந்திர குற்றக் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்தும், குற்ற சம்பவங்கள் அதிகம் நடைபெறும் பகுதிகளில் ரோந்து பணிகளை தீவிரப்படுத்துவது குறித்தும், குற்ற வழக்குகளை விரைந்து முடிக்கும் படியும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுரை கூறினார்
மேலும் இக்கூட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு பணவெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.