தேனி – செப் – 09,2021
செய்தியாளர் – செல்வக்குமார்
தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா பெரியகுளம் துணைக் கண்காணிப்பாளர் தலைமையில் அவர் அலுவலகத்தில் ஊர் பொதுமக்கள் அனைவரையும் அழைத்து விநாயகர் சதுர்த்தி விழாவை அவரவர் வீட்டில் கொண்டாடுமாறு கேட்டுக்கொண்டார் பின்பு பொதுமக்கள் சார்பாக விநாயகர் சிலை வைத்து வழிபட்டு அதை ஊர்வலமாக எடுத்து வர கோரிக்கை மனு வைக்கப்பட்டனர்.. பின்பு டிஎஸ்பி முத்துக்குமார் கூறுகையில் கொரோனா காலத்தில் அவரவர் வீட்டில் விநாயகர் சிலையை வைத்து வழிபாடு செய்து வீட்டில் ஒருவர் அல்லது இருவர் மட்டும் சிலையை எடுத்துக்கொண்டு சிலை உரிய இடத்தில் பாதுகாப்பான முறையில் கரைத்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார் தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாட்டை யாரும் மீற வேண்டாம் என பொதுமக்களிடையே கேட்டுக்கொண்டார்