94.9 F
Tirunelveli
Tuesday, March 28, 2023
முகப்பு மாவட்டம் சென்னை ஆயுதபடை பெண் காவலர்களுக்கு புத்தாக்க பயிற்சி முகாமை பெருநகர போலீஸ் கமிஷனர் துவக்கிவைத்தார்

ஆயுதபடை பெண் காவலர்களுக்கு புத்தாக்க பயிற்சி முகாமை பெருநகர போலீஸ் கமிஷனர் துவக்கிவைத்தார்

சென்னை – செப் -22,2021

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் ஆயுதப்படை பெண் காவலர்களுக்கான (Women Empowerment Refreshing Training Programme) புத்தாக்க பயிற்சி முகாமை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

சென்னை பெருநகர காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து வரும் காவலர்களின் நலனை போற்றும் வகையில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால் இ.கா.ப அவர்களின் உத்தரவின்பேரில் பல்வேறு நலத்திட்டங்கள் காவல் ஆளிநர்களுக்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக சென்னை பெருநகர காவல் துறையில் பணிபுரியும் ஆயுதப்படை பெண் காவலர்களுக்கு புத்தாக்க பயிற்சியளிக்க சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவிட்டதின் பேரில் பெண் காவலர்களுக்காக (Women Empowerment Refreshing Training Programme) சிறப்பு புத்தாக்க பயிற்சி முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

இன்று எழும்பூர், டான்பாஸ்கோ மெட்ரிக்குலேசன் மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற ஆயுதப்படை பெண்காவலர்களுக்கான, புத்தாக்க பயிற்சி முகாமை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப துவக்கி வைத்து சிறப்புரையாற்றி பெண் காவலர்கள் பணியில் உத்வேகத்துடன் செயல்பட அறிவுரை வழங்கினார். மேலும் ஆயுதப்படை பெண் காவலர்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.

இப்பயிற்சி முகாமில் ஆயுதப்படை பெண் காவலர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகாமல் பணியின்போது எவ்வாறு செயல்படுவது, குடும்பத்திற்கு எவ்வாறு நேரம் ஒதுக்குவது, தனது குழந்தைகளை நல்ல முறையில் பராமரிப்பது, பணிபுரியும் இடத்தில் சோர்வாகமால் பணியினை எதிர்கொள்வது, இக்கட்டான நேரங்களில் பெண்கள் தவறான முடிவுகளை எடுக்காமல் அதை தைரியமாக எதிர்கொள்வது பற்றியும் பயிற்சி அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்தியா மற்றும் உலகளவில் பல்வேறு துறைகளில் சாதனைப்படைத்த பெண்களை பற்றிய தொகுப்புகள் காணொளி காட்சி மூலம் காண்பிக்கப்பட்டு பணியில் உத்வேகத்துடனுடம் உறுதியுடனும் செயல்பட்டால் பெண்களும் உயர் நிலைக்கு செல்லலாம் என பெண்காவலர்களுக்கு உத்வேகம் அளிக்கப்பட்டது. இப்பயிற்சி முகாமில் 500 ஆயுதப்படை பெண்காவலர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். மேலும் இப்பயிற்சி முகாம் ஆயுதப்படையிலுள்ள 2357 பெண்காவலர்கள் பயனடையும் வகையில் 5 நாட்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் முனைவர் லோகநாதன், இ.கா.ப, (தலைமையிடம்) இணை ஆணையாளர் சாமுண்டீஸ்வரி, இ.கா.ப, துணை ஆணையாளர்கள் பாலாஜிசரவணன், (தலைமையிடம்),சௌந்தராஜன் (ஆயுதப்படை) மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில் ஆயுத படை காவலர்கள் காவல்நிலைய பணிக்கு நியமனம் செய்யும் கலந்‌‌‌தாய்‌‌‌வு கூட்டம் ...

0
தூத்துக்குடி - மார்ச் -27,2023 newz - webteam தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்கள் தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் ...

அரியலூரில் கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நேர்மைக்கு மாவட்ட...

0
அரியலூர் - மார்ச் -27,2023 newz - webteam கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நற்செயலினை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு. அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமம் மேட்டுகிருஷ்ணாபுரம்...

நெல்லை மாவட்டத்தில் 3,கோடி மதிப்புள்ள 1200,கிலோ கஞ்‌‌‌சா டிஐஜி,எஸ்பி்‌‌‌ முன்னிலையில் தீயிட்‌‌‌டு அழிப்‌‌‌பு….

0
திருநெல்வேலி - மார்ச் - 27,2023 newz - webteam தென் மாவட்டங்களில் கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 3 கோடி மதிப்புள்ள 1211 கிலோ கஞ்சா, திருநெல்வேலி...

பெண் காவலர்களின் 50 ஆண்டுகால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையில் தொடங்கிய சைக்கில்‌‌‌...

0
நெல்லை மாநகரம் - மார்ச் -26,2023 newz - webteam தமிழக காவல் துறையில் பெண் காவலர்கள் பணியில் சேர்ந்து 50 ம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு சைக்கிள் பேரணி வந்த பெண்...

பெண்காவலர்களின் 50,ஆண்டு கால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையிலிருந்து துவங்கிய சைக்கிள் பேரணியை...

0
தூத்துக்குடி - மார்ச் -25,2023 newz - webteam தமிழ்நாடு காவல்துறையில் பெண்கள் பணிக்கு சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு அதை கொண்டாடும் விதமாக ‘காவல் பணியில் பெண்கள்” என்ற தலைப்பில் தமிழ்நாடு...

தற்போதைய செய்திகள்