திண்டுக்கல் – செப் -26,2021
திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து நடந்த இரண்டு கொலை வழக்குகளில் விரைந்து குற்றவாளிகளை கைது செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு, இ.கா.ப., பணம் ரூபாய் 10,000/-வெகுமதி அளித்து பாராட்டினார்
இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் இக்கொலை வழக்கில் சிறப்பாக செயல்பட்ட மாவட்ட காவல்துறையினருக்கு வெகுமதி அளித்து பாராட்டினார்
திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் ஊரக உட்கோட்டம் தாடிக்கொம்பு மற்றும் திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நடந்த இரண்டு கொலை வழக்குகளில் விரைந்து குற்றவாளிகளை கைது செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் உயர்திரு.சைலேந்திரபாபு அவர்கள் பணம் ரூபாய் 10,000/- வெகுமதி அளித்து பாராட்டினார்
இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் இக்கொலை வழக்கில் சிறப்பாக செயல்பட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், திண்டுக்கல் தாலுகா, திண்டுக்கல் நகர் வடக்கு, வடமதுரை, ஒட்டன்சத்திரம், தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள், காவலர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தனிப்படை சார்பு ஆய்வாளர் மற்றும் காவலர்கள் ஆகியோர்களை நேரில் அழைத்து வெகுமதி அளித்து பாராட்டினார்