திருநெல்வேலி – செப்-18,2021
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் சம்பந்தமாக, நெல்லை மாநகர மகளிர் காவல் அதிகாரிகள் மற்றும் காவல் அலுவலர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பை துவக்கி வைத்த காவல் ஆணையாளர்
நெல்லை மாநகர காவல் ஆணையாளர் முனைவர் செந்தாமரைக் கண்ணன் இ.கா.ப நெல்லை மாநகர மகளிர் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் தலைமை காவலர்களுக்கு மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் இன்று ஒரு நாள் சிறப்பு பயிற்சியை துவக்கி வைத்து, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் சம்பந்தமான வழக்குகளை கையாளும் முறைகளை விளக்கினார்கள். உடன் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் துணை ஆணையாளர் சுரேஷ்குமார் குற்றம் மற்றும் போக்குவரத்து காவல் துணை ஆணையாளர் .சுரேஷ்குமார, CWC கூடுதல் காவல் துணை ஆணையாளர் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் சிறப்பு விருந்தினராக மதுரை அரசு சட்டக்கல்லூரி பேராசிரியர் சிவகுமார் போக்சோ மற்றும் பலாத்காரம் போன்ற வழக்குகளை விசாரணை பற்றியும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறாமல் இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்துவது இப்பயிற்சி வகுப்பில் விளக்கினார்கள். ஒரு நாள் சிறப்பு பயிற்சியில் நெல்லை மாநகர மகளிர் காவல் அதிகாரிகள் மற்றும் தலைமைக்காவலர்கள் சுமார் 70 பேர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.